திமுக அதிமுகவை கதறவிடும் விஜய்..! பிரபல டிவி கருத்துக்கணிப்பால் அதிர்ச்சி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், விஜய் உள்ளிட்ட கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்த கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. திமுக, அதிமுக, தவெகவிற்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகளை தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. குறிப்பாக கிளைக்கழகம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம், செயல்வீரர்கள் கூட்டம், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது. அடுத்ததாக ஓரணியில் தமிழகம் என்ற தலைப்பில் திமுக சார்பாக வீடு வீடாக பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. அப்போது திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.
களத்தில் இறங்கிய அரசியல் தலைவர்கள்
ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுகவும் தற்போதே தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களை சந்தித்து அரசின் செயல்பாடுகளை எடுத்துரைத்து வாக்கு கேட்கும் பணியை எடப்பாடி பழனிசாமி தற்போதே தொடங்கியுள்ளார். தொகுதி வாரியாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். அதே நேரம் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யும் அரசியலில் களத்தில் இறங்கியுள்ளார். ஆகஸ்ட் மாதம் மாநில மாநாட்டை நடத்தும் விஜய், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு.?
தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில், கூட்டணி இன்னும் முடிவடையாத நிலையில், தற்போதே தேர்தல் வந்தால் யாருக்கு வாக்களிப்போம் என்ற கருத்து கணிப்பை தனியார் தொலைக்காட்சியான சத்தியம் எடுத்துள்ளது. அந்த வகையில் திமுகவிற்கு 105 தொகுதிகளும், அதிமுகவிற்கு 90 இடங்களும், நாம் தமிழர் மற்றும் விஜய்க்கு பூஜ்யம் தொகுதிகளும் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும் அதிமுக - திமுக இடையே 39 தொகுதிகள் இழுபறியாக இருப்பதாகவும், அதில் திமுகவிற்கு 25 தொகுதிகளிலும், அதிமுகவிற்கு 14 தொகுதிகளிலும் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்து போட்டியிட்டால் யாருக்கு வெற்றி.?
மேலும் தேர்தலில் கூட்டணிகள் எதுவும் இல்லாமல் கட்சிகள் தணித்தனியாக போட்டியிட்டால் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு வாக்கு என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 27 சதவிகித வாக்குகளும், எடப்பாடி பழனிசாமிக்கு 19 சதவிகித வாக்குகளும்,விஜய்க்கு 12 சதவிகித வாக்குகளும்,
திருமாவளவன் மற்றும் அன்புமணிக்கு 12 சதவிகித வாக்குகளும், சீமானுக்கு 9 சதவிகித வாக்குகளும், அண்ணாமலைக்கு 5 சதவிகித வாக்குகளும் கிடைக்கும் வைகோ, டிடிவி, ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஒரு சதவிகித வாக்குகள் கிடைக்கும் என சத்தியம் தொலைக்காட்சி எடுத்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

