MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!

குளிருக்கு பிரேக்.. உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! ரவுண்ட் கட்டி அடிச்சு ஊத்தப்போகும் மழை!

Tamilnadu Rain: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 06 2026, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வடகிழக்கு பருவமழை
Image Credit : our own

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியதில் இருந்து வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகளின் நீர் மட்டங்கள் கிடுகிடுவென உயர்ந்தது. இதனையடுத்து நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் எதிர்பார்த்த மழை பெய்யாமல் ஏமாற்றியது. பின்னர் தமிழகத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக அதிகாலை நேரத்தில் நடுங்க வைத்தது குளிர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : our own

காற்றழுத்த தாழ்வு பகுதி

இந்நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் பூமத்திய ரேகையை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 9ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
Related image2
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.! இந்த முறை புகுந்த விளாசப்போகுதாம்.! எந்தெந்த மாவட்டங்களில்!
35
மிதமான மழை பெய்யக்கூடும்
Image Credit : Google

மிதமான மழை பெய்யக்கூடும்

இதனிடையே இன்று மற்றும் நாளை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். டிசம்பர் 8ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

45
டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை
Image Credit : our own

டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

மேலும் டிசம்பர் 9ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

55
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
Recommended image2
மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்.! இந்த முறை புகுந்த விளாசப்போகுதாம்.! எந்தெந்த மாவட்டங்களில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved