MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்ட இல்ல! 10 வருட காதலுக்கு ஒரே இரவில் முடிவு கட்டிய மாலினி வீட்டார்!

என் பொண்ண என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போயிட்ட இல்ல! 10 வருட காதலுக்கு ஒரே இரவில் முடிவு கட்டிய மாலினி வீட்டார்!

காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததால், டூ வீலர் மெக்கானிக் வாலிபர் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். காதலியின் குடும்பத்தினர் மீது கொலைப் பழி சுமத்தப்பட்டுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 16 2025, 10:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காதல்
Image Credit : Asianet News

காதல்

மயிலாடுதுறை மாவட்டம் அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (28) என்ற மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். வைரமுத்து டூ வீலர் மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பக்கத்து தெருவில் (காலணி தெரு) வசிக்கும் குமார் என்பவரின் மகள் கல்லூரி படிப்பை முடித்த மாலினி (26) என்பவரை 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மாலினி சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

25
பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு
Image Credit : Google

பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு

காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் பிரச்சனை நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாலினியின் தாயார் விஜயா வைரமுத்து வேலை பார்க்கும் இடத்திற்கு சென்று வைரமுத்துவிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து மாலினியின் குடும்பத்தார் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இருதரப்பினரையும் காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் மாலினியின் குடும்பத்தினர் தங்கள் மகள் மாலினியை நிராகரித்துள்ளனர்.

Related Articles

Related image1
போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை
Related image2
டமால் டுமீல்! சென்னையில் மழை காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
35
வைரமுத்து கொலை
Image Credit : Asianet News

வைரமுத்து கொலை

தொடர்ந்து மாலினி வைரமுத்துவின் வீட்டிற்கு சென்றுள்ளார். வைரமுத்துவிற்கும் மாலினிக்கும் பதிவு திருமணம் சில மாதங்களில் செய்து வைப்பதாக வைரமுத்துவின் பெற்றோர்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து மாலினி இன்று வேலைக்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் இரவு வீட்டிற்கு வந்த வைரமுத்துவை வழிமறித்த மர்மநபர்கள் ஓட ஓட விரட்டிச் சென்று வைரமுத்துவை சராமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். கழுத்து மற்றும் இரண்டு கைகளிலும் வெட்டிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். உயிருக்கு போராடிய வைரமுத்துவை உறவினர்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

45
போலீஸ் குவிப்பு
Image Credit : our own

போலீஸ் குவிப்பு

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு 30க்கும் மேற்பட்ட போலீசார் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். தங்கள் மகனை காதலியின் குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

55
மாலினியின் தாயார் மிரட்டல் வீடியோ
Image Credit : our own

மாலினியின் தாயார் மிரட்டல் வீடியோ

டூவீலர் மெக்கானிக் ஷாப்பிற்கு சென்று வைரமுத்துவிடம் வாக்குவாதம் செய்யும்போது அப்பவே உன்னை தட்டியிருக்க வேண்டும் என்று மாலினியின் தாயார் விஜயா மிரட்டல் விடுக்கும் வீடியோ பதிவை காவல்துறையில் வழங்கியுள்ளனர். காதலி குடும்பத்தினர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
கொலை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
போன், லேப்டாப்பில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் 5 முதல் 8 மணிநேரம் வரை மின்தடை
Recommended image2
டமால் டுமீல்! சென்னையில் மழை காட்டு காட்டுன்னு காட்டப் போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved