MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

பள்ளி மாணவர்கள் குஷியோ குஷி! மார்ச் 12ம் தேதி விடுமுறை! என்ன காரணம் தெரியுமா?

கும்பகோணத்தில் மாசி மகம் திருவிழா முன்னிட்டு மார்ச் 12ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 10 2025, 04:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Masi Magam Festival

Masi Magam Festival

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நாடு முழுவதும் இருந்து மகாமகம் குளத்தில் புனித நீராட லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். அதேபோன்று கும்பகோணத்தில் நடைபெறும் மாசிமகம் திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. மாசி மாத பவுர்ணமியும் மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய தினம் மாசி மகம் என அழைக்கப்படுகிறது.  இந்த நாள் சிவபெருமானுக்கு மற்றும் பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

26
Local Holidays

Local Holidays

இந்த நாளில் காசிக்கு இணையான கும்பகோணம் மகாமக குளத்தில் புனித நீராடினால் செய்த பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். இந்நிலையில், இந்த ஆண்டு மாசி மகம் மார்ச் 12ம் நடைபெறுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார் என்பதால் அன்றைய தினம் தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

36
Thanjavur District Collector

Thanjavur District Collector

இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசியகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்படுவது வழக்கம். 

46
School Holiday

School Holiday

அதன்படி, இந்த ஆண்டும் கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு வருகிற மார்ச் 12ம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறை என்றாலும், அரசு பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

56
Government Employee

Government Employee

ஆனாலும் அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட கருவூலமும் மற்றும் சார்நிலைக் கருவூலங்களும் குறைந்த பணியாளர்களை கொண்டு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

66
School Working Day

School Working Day

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved