MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • சுய உதவி குழுவிற்கு கொண்டாட்டம்.! தலா 40ஆயிரம் ரூபாய் கடனுதவி.! தமிழக அரசு அசத்தல் திட்டம் அறிவிப்பு

சுய உதவி குழுவிற்கு கொண்டாட்டம்.! தலா 40ஆயிரம் ரூபாய் கடனுதவி.! தமிழக அரசு அசத்தல் திட்டம் அறிவிப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படவுள்ளது. தனி நபர் ஒருவருக்கு ரூ. 40,000/- வீதம் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Ajmal Khan
Published : Jul 30 2025, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக அரசின் சுய உதவிக்குழு திட்டங்கள்
Image Credit : tndipr

தமிழக அரசின் சுய உதவிக்குழு திட்டங்கள்

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மகளிர்கள் சொந்தமாக முன்னேற மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சுழல் நிதியானது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கடன் உதவி திட்டங்களும், மானிய கடன் உதவி திட்டங்களும் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் திருநங்கையருக்கு தனிநபர் கடனுதவி வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள், நலிவடைந்த பழங்குடியினர் (PVTG). திருநங்கைகளை (மூன்றாம் பாலினத்தவர்) கொண்டு சிறப்பு சுய உதவிக் குழுக்களை அமைப்பதன் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அவர்களின் வறுமை மற்றும் பாதிப்புகளை குறைத்து, வாழ்வாதாரம் மேம்படுவதற்கான முறையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

25
தலா 40ஆயிரம் ரூபாய் கடன் உதவி
Image Credit : our own

தலா 40ஆயிரம் ரூபாய் கடன் உதவி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சிறப்பு சுய உதவிக் குழுக்களில் உள்ள மாற்றுத் திறனாளிகள் (ஆண்/பெண்) தனிநபர் மற்றும் திருநங்கைகளின் (மூன்றாம் பாலினத்தவர்) வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், அவர்களை தொழில் முனைவோராக ஊக்குவித்திடவும், தனி நபர் ஒருவருக்கு ரூ. 40,000/- வீதம் 6,000 நபர்களுக்கு கடனுதவி வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
12 நாள் விடுமுறை.! குஷியான மாதமாகும் ஆகஸ்ட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Related image2
விவசாயிகளுக்கு குட்நியூஸ்...வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய்.! கம்மியான வட்டி- அள்ளிக்கொடுக்கும் அரசு
35
திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்
Image Credit : Google

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்

  • மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவரது பெற்றோர்/கணவர்/மனைவி ஆகியோர் சுய உதவி குழுக்களில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
  • திருநங்கையர்கள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்தாலும் அல்லது இல்லாமல் இருந்தாலும் தொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் ஒவ்வொருவருக்கும் இக்கடனுதவி வழங்கப்படும்
  • 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • ஊரகப் பகுதியில் வசிப்பவராக இருக்க வேண்டும்
  • நிரந்தர முகவரி இருக்க வேண்டும்
  • வங்கிக் கணக்கு தனி நபர் பெயரில் தொடங்கி இருக்க வேண்டும்
  • மாற்றுத் திறனாளி எனில் UDID அடையாள அட்டை அல்லது மற்ற அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
  • திருநங்கையர்கள் எனில் சமூக நலத்துறையால் வழங்கப்படும் அடையாள அட்டை
45
திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Image Credit : our own

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

  • உணவு பதப்படுத்தும் தொழில்கள், பண்ணை சாரா தொழில்கள், உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு, பிணையம் எதுவும் இன்றி ரூ. 40,000/-வரை கடன் வழங்கப்படுகிறது.
  • கடன் தொகையினை உரிய காலத்தில் திரும்பச் செலுத்தினால் மீண்டும் வங்கிக் கடனுதவி பெற்றுத் தரப்படும்

வட்டி விகிதம்:

மாற்றுத் திறனாளி / திருநங்கையர்கள் பாதிக்கப்படக்கூடிய நபராகக் கருதப்படுவதால், 6% வட்டி விகிதத்தில் 12 முதல் 24 மாத தவணையில் திரும்பப் பெறும் கடனாக வழங்கப்படும்.

55
கடன் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
Image Credit : our own

கடன் பெற தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

1. தொடர்புடைய ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்

2. அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்கள்

3. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600 034.

4. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார அழைப்பு மைய தொடர்பு எண்: 155 330

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
தமிழ் செய்திகள்
மகளிர் உரிமைத் தொகை
கடன்
தமிழ்நாடு அரசு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
12 நாள் விடுமுறை.! குஷியான மாதமாகும் ஆகஸ்ட்- துள்ளி குதிக்கும் மாணவர்கள்
Recommended image2
விவசாயிகளுக்கு குட்நியூஸ்...வங்கி கணக்கில் 1.20 லட்சம் ரூபாய்.! கம்மியான வட்டி- அள்ளிக்கொடுக்கும் அரசு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved