MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!

என்ன நடிப்புடா சாமி! இது அப்பட்டமான பொய்! திமுகவின் முகத்திரையை கிழிக்கும் அன்புமணி!

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்த திமுக அரசு, மக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது. இது மக்கள் நலனை விட, இரட்டை வேடம் மற்றும் சந்தர்ப்பவாதம் நிறைந்த செயல்.

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 25 2025, 09:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அன்புமணி
Image Credit : google

அன்புமணி

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே துரோகம் செய்து வருகிறது. அப்பட்டமாக துரோகம் செய்து, ஊடகங்களின் உதவியுடன் அதை மறைக்கும் முயற்சிகள் இனியும் வெற்றி பெறாது என அன்புமணி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அதாவது இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அதற்கு உழவர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அதன் முடிவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறது. இந்த முடிவின் பின்னணியில் திமுக அரசின் மக்கள் நலனை விட, இரட்டை வேடமும், சந்தர்ப்பவாதமும் தான் நிறைந்திருக்கிறது.

25
ஹைட்ரோ கார்பன் கிணறு
Image Credit : Asianet News

ஹைட்ரோ கார்பன் கிணறு

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்ட செய்தி வெளியானதுமே அரசியல் கட்சிகள், உழவர்கள் அமைப்புகள் உள்ளிட்டவற்றிடமிருந்து கண்டனங்கள் குவிந்தன. இந்த விவகாரத்தில் திமுக அரசின் துரோகத்தை பாட்டாளி மக்கள் கட்சி தான் முதன்முதலில் அம்பலப்படுத்தியது. தமது துரோகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டதை உணர்ந்த திமுக அரசு, இனியும் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து தான் முடிவைத் திரும்பப் பெற்றுள்ளது.

Related Articles

Related image1
கோவை முதல் சென்னை வரை! இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Related image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
35
திமுக அரசு நாடகம்
Image Credit : Asianet News

திமுக அரசு நாடகம்

ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் தான். இந்த அமைப்பு தமிழக அரசின் கீழ் செயல்படும் அமைப்பாகும். ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அந்த அமைப்பு தன்னிச்சையாக அனுமதி கொடுத்து விட்டதைப் போலவும், அது குறித்த செய்தி தமக்கு தெரிந்தவுடன் உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தி விட்டதைப் போலவும் திமுக அரசு நாடகமாடுகிறது. இது அப்பட்டமான பொய். மாநில அரசு வகுத்துத் தரும் கொள்கையின்படி தான் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் முடிவெடுக்க முடியும். ஆணையத்தின் முடிவின் பின்னணியில் இருப்பது திமுக அரசு தான்.

45
பல்டி அடித்த திமுக
Image Credit : our own

பல்டி அடித்த திமுக

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திணிப்பது, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தால் உடனடியாக திரும்பப் பெறுவது என்ற உத்தியைத் தான் திமுக அரசு கடைபிடித்து வருகிறது. 2010-ஆம் ஆண்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதித்த திமுக அரசு, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் ஆய்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக பல்டி அடித்தது. காவிரி பாசன மாவட்டங்களில் நிலக்கரி சுரங்கங்களை அமைப்பது, மதுரை அரிட்டாப்பட்டியில் டங்கஸ்டன் சுரங்கம் அமைப்பது ஆகியவற்றிலும் திமுக அரசு இதே நாடகங்களைத் தான் அரங்கேற்றியது.

55
தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி
Image Credit : Facebook/anbumani

தமிழ்நாட்டை பாலைவனமாக்க முயற்சி

தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் முயற்சிகளுக்கு திமுக கடந்த 15 ஆண்டுகளாகவே துரோகம் செய்து வருகிறது. அப்பட்டமாக துரோகம் செய்து, ஊடகங்களின் உதவியுடன் அதை மறைக்கும் முயற்சிகள் இனியும் வெற்றி பெறாது. இந்த விவகாரத்தில் திமுக செய்த துரோகங்களை மன்னிக்கத் தயாராக இல்லாத தமிழ்நாட்டு மக்கள், வரும் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டுவதற்கு தயாராகி காத்திருக்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
அரசியல்
தமிழ்நாடு
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
கோவை முதல் சென்னை வரை! இன்று காலை 9 மணி முதல் எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம் மின்தடை?
Recommended image2
ஆசிரியர்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! இனி அவ்வளவுதான்! செக் வைத்த பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved