MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் மழை! சென்னை வானிலையின் சூப்பர் அப்டேட்!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் மழை! சென்னை வானிலையின் சூப்பர் அப்டேட்!

Tamilnadu Weather Update: தென்தமிழகம் மற்றும் ஆந்திரா பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 22 2025, 03:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
நேற்று கனமழை
Image Credit : Google

நேற்று கனமழை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலும் இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று கூட விழுப்புரம் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை அடிச்சு ஊத்தியது. இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

27
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி
Image Credit : Google

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் மத்திய ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று காலை 05.30 மணி அளவில் வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காலை 08.30 மணியளவில் அதே பகுதிகளில் நிலவிகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில், வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

Related Articles

Related image1
வாரத்தின் முதல் நாள் அதுவுமா இப்படியா? தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 முதல் 8 மணிநேரம் மின்தடை!
Related image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! இதை கண்டிப்பாக செய்தால் மட்டுமே பொதுத்தேர்வு! பள்ளிக்கல்வித்துறை!
37
காற்றழுத்த தாழ்வு மண்டலம்
Image Credit : Google

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வருகின்ற 25ம் தேதி வாக்கில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 26-ம் தேதி வாக்கில், தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ம் தேதி வாக்கில் தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் கரையை கடக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

47
11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Image Credit : our own

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

57
லேசானது முதல் மிதமான மழை
Image Credit : our own

லேசானது முதல் மிதமான மழை

அதேபோல் நாளை செவ்வாய்க்கிழமை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

67
வெப்பநிலை நிலவரம்
Image Credit : Asianet News

வெப்பநிலை நிலவரம்

இன்று முதல் செப்டம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. எனினும், ஒருசில இடங்களில் சற்று உயரக்கூடும். அதேபோல் இன்று மற்றும் 26 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

77
சென்னையில் கனமழை வார்னிங்
Image Credit : our own

சென்னையில் கனமழை வார்னிங்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
வாரத்தின் முதல் நாள் அதுவுமா இப்படியா? தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 முதல் 8 மணிநேரம் மின்தடை!
Recommended image2
10-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு! இதை கண்டிப்பாக செய்தால் மட்டுமே பொதுத்தேர்வு! பள்ளிக்கல்வித்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved