MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! அடுத்த 3 மணிநேரத்தில் சென்னையில் சம்பவம் இருக்காம்!

கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! அடுத்த 3 மணிநேரத்தில் சென்னையில் சம்பவம் இருக்காம்!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 20 2025, 08:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காற்றழுத்த தாழ்வுப்பகுதி
Image Credit : Google

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியது முதலே சென்னை, விழுப்புரம், திரவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை வாக்கில் ஒருவளி மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்.

24
கனமழை எச்சரிக்கை
Image Credit : Google

கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
சென்னையில் ஐடி பெண் ஊழியரின் வாயை பொத்தி பாலியல் தொல்லை! யோகேஸ்வரன் சிக்கியது எப்படி? பரபர தகவல்!
Related image2
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதுவும் 8 மணிநேரம்!
34
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : Google

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

44
அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை எச்சரிக்கை
Image Credit : our own

அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை எச்சரிக்கை

இதனிடையே அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
தமிழ்நாடு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
சென்னையில் ஐடி பெண் ஊழியரின் வாயை பொத்தி பாலியல் தொல்லை! யோகேஸ்வரன் சிக்கியது எப்படி? பரபர தகவல்!
Recommended image2
தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதுவும் 8 மணிநேரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved