- Home
- Tamil Nadu News
- தீபாவளி விடுமுறைக்கு குற்றாலத்திற்கு செல்ல திட்டமா.? அருவி நிலவரம் எப்படி இருக்கு தெரியுமா.?
தீபாவளி விடுமுறைக்கு குற்றாலத்திற்கு செல்ல திட்டமா.? அருவி நிலவரம் எப்படி இருக்கு தெரியுமா.?
தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு பலர் குற்றாலம் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால், வடகிழக்கு பருவமழை காரணமாக குற்றாலத்தில் கனமழை பெய்து, அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உற்சாகத்தில் உள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதில் பெரும்பாலான மக்கள் சொந்த ஊரில் சென்று தீபாவளிக்கு கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே கடந்த இரண்டு தினங்களாக சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு பயணத்தை தொடங்கியுள்ளளனர். அந்த வகையில் தமிழக அரசு பேருந்தில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் இதுவரை பயணம் செய்துள்ளனர்.
அதே நேரம் இந்த விடுமுறையில் தீபாவளி கொண்டாட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் பலரும் சுற்றுலாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தொடர் விடுமுறை காரணமாக குற்றாலம், ஊட்டி, கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு புறப்பட பிளான் செய்துள்ளனர். இந்த நிலையில் சுற்றுலாவிற்கு திட்டமிட்டவர்களுக்கு திடீரென மழையானது ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியுள்ளது. ஆரம்பமே அசத்ததலாக தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள குற்றால அருவிகளிலும் கனமழையின் எதிரொலியாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து விழுந்தது. உடனடியாக சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அருவிகளிலும் போலீசாரால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
எனவே சுற்றுலாவிற்கு குற்றாலம் செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களது பயணத்தை ஒத்திவைப்பதே தற்போது உள்ள நிலையில் சிறந்ததாகும். தென்காசி மாவட்டத்தில் பல இடங்கள் தண்ணீரில் மிதக்கும் நிலை உள்ளது. மழையானது மேலும் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் வெளியில் சுற்றி பார்க்க கூட முடியாத வகையில் விடுதி அறையில் அடைந்து கிடக்கும் நிலைதான் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் சார்பாக அடுத்த அறிவிப்பு வரும் வரை தப்பி தவறி கூட குற்றால பக்கம் செல்வதை தவிர்ப்பதே நல்லதாகும்.

