MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • பிப்ரவரி 24 முதல்.. லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

பிப்ரவரி 24 முதல்.. லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்!

Electrical Vehicle Technology: இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்த வாடகையில் தங்கும் விடுதி.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 19 2026, 02:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக அரசு
Image Credit : our own

தமிழக அரசு

வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் வேலையை வாய்ப்பை அரசு ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்புகளை கொடுக்கவும், சுய தொழில் தொடங்கவும் சிறுதானியங்களை (மில்லெட்) கொண்டு பேக்கரி பொருட்கள் தயாரித்தல், டிரோன் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு நடத்தி வருகிறது.

24
மின்சார வாகன தொழில்நுட்பம் பயிற்சி
Image Credit : our own

மின்சார வாகன தொழில்நுட்பம் பயிற்சி

இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்தில் பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு தரப்பினரும் மாறி வரும் சூழலில் இதற்காக 3 நாட்கள் மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “Electrical Vehicle Technology (EV) Training Programme” தொடர்பான பயிற்சி வரும் 24.02.2026 முதல் 26.02.2026 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

Related Articles

Related image1
பிப்ரவரி 21 முதல் 23 வரை விடாமல் ஊத்தப்போகும் மழை.! விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்!
Related image2
இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!
34
மின்சார வாகனங்கள் சர்வீஸ்
Image Credit : Asianet News

மின்சார வாகனங்கள் சர்வீஸ்

இப்பயிற்சியில் மின்சார வாகன அறிமுகம், EV அமைப்பு கட்டமைப்பு (மிக முக்கியமானது), மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் மின்சார மோட்டார்கள், பவர் எலக்ட்ரானிக்ஸ் அடிப்படைகள், மீளுருவாக்க பிரேக்கிங், EV பேட்டரி அடிப்படைகள் (மிக முக்கியமானது), பேட்டரி மேலாண்மை அமைப்பு (BMS), EV சார்ஜிங் தொழில்நுட்பங்கள், மின்சார வாகனங்களில் வெப்ப மேலாண்மை, EVகளில் பாதுகாப்பு, EV பவர்டிரெய்ன் இயக்கம் (வாகன நிலை புரிதல்), EV செயல்திறன் அளவுருக்கள், EV கட்டுப்பாட்டு அமைப்புகளின் அடிப்படைகள் (சிக்கலான கணிதம் இல்லை), மீளுருவாக்க பிரேக்கிங் - ஆழமானது (இன்னும் எளிமையானது), EV சோதனை, செயல்திறன் & தரநிலைகள் (அறிமுக நிலை), EV பயன்பாடுகள் & வழக்கு ஆய்வுகள், மின்சார வாகனங்களின் நன்மைகள், வரம்புகள் மற்றும் சவால்கள்.

44
விண்ணப்பிப்பது எப்படி?
Image Credit : Asianet News

விண்ணப்பிப்பது எப்படி?

இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் பங்கு பெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் கைபேசி எண்கள். 8668102600, 8754495254. முன்பதிவு அவசியம்: அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உருளி வண்டிகள்
தமிழ்நாடு அரசு
சென்னை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பிஎச்.டி. மாணவர் சேர்க்கையில் அதிரடி மாற்றம்! அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
Recommended image2
பெண்களுக்கு ஜாக்பாட்.. இனி ஒவ்வொரு கோடையிலும் எக்ஸ்டிரா ரூ.2,000.. தமிழக அரசு குஷியான அறிவிப்பு!
Recommended image3
பிப்ரவரி 21 அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான முக்கிய அறிவிப்பு!
Related Stories
Recommended image1
பிப்ரவரி 21 முதல் 23 வரை விடாமல் ஊத்தப்போகும் மழை.! விவசாயிகளுக்கு முக்கிய அலர்ட் கொடுத்த டெல்டா வெதர்மேன்!
Recommended image2
இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved