MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Drone Training: லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.! மூன்றே நாள் தான் பயிற்சி.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

Drone Training: லட்சம் லட்சமாய் சம்பாதிக்கலாம்.! மூன்றே நாள் தான் பயிற்சி.. சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு.!

Drone Training: சென்னையில் மீடியா ட்ரோன் பயிற்சியை வழங்குகிறது. பிப்ரவரி 09 முதல் 11 வரை நடைபெறும் இந்த 3 நாள் பயிற்சியில் ட்ரோன் தொழில்நுட்பம் குறித்து விளக்கப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 03 2026, 01:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வேலை இல்லாத இளைஞர் சூப்பர் வாய்ப்பு
Image Credit : Asianet News

வேலை இல்லாத இளைஞர் சூப்பர் வாய்ப்பு

வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் மற்றும் சொந்த தொழில் தொடங்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களில் அரசு இணைந்து வேலை வாய்ப்பை ஏற்படுத்தி மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர்.

26
ட்ரோன் பயிற்சி
Image Credit : Asianet News

ட்ரோன் பயிற்சி

இந்நிலையில் தற்போதைய காலக்கட்டத்தில் திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் விளம்பரத் துறைகள், திருமண விழாக்கள் உள்ளிட்டவைகளுக்கு ட்ரோன் பயன்பாடு மிக முக்கியமானதாக ஒன்றாக இருந்து வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘மீடியா ட்ரோன் பயிற்சி’ வரும் பிப்ரவரி 09 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

Related Articles

Related image1
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
Related image2
1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! யாருக்கெல்லாம்? குஷியில் துள்ளிக்குதிக்கும் தொழிலாளர்கள்!
36
பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்
Image Credit : our own

பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்

* ட்ரோன் தொழில்நுட்பம் – அறிமுகம்

* ட்ரோன் சினிமாடோகிராஃபி நுட்பங்கள்

* வானிலிருந்து(Aerial Photography) புகைப்படம் – அறிமுகம்

* FPV சினிமாடோகிராஃபி

* DGCA விதிமுறைகள் மற்றும் விமான பாதுகாப்பு

46
மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்
Image Credit : Gemini

மீடியா ட்ரோன் பைலட்டுகளுக்கான தொழில் வாய்ப்புகள்

திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு, செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள், ஆவணப்பட தயாரித்தல், விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங், கார்ப்பரேட் திரைப்படங்கள், யூடியூப் மற்றும் சமூக ஊடக உள்ளடக்க உருவாக்கம், காவல் மற்றும் ராணுவ கண்காணிப்பு, நிகழ்ச்சி செய்தி களிப்பு, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை, ரியல் எஸ்டேட் புகைப்படம் / வீடியோ தயாரித்தல், தொழிற்துறை புகைப்படம், காடு மற்றும் விலங்கியல் புகைப்படம், தீ மற்றும் மீட்பு பணிகள், அரசுத் திட்டங்கள் மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும்.

56
தொழில் முனைவோர்கள்
Image Credit : our own

தொழில் முனைவோர்கள்

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப் பயிற்சியில் பங்கு பெறும் பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

66
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்
Image Credit : our own

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.tn என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 9360221280 / 8668100181 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை ) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
சென்னை
பயிற்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
விவசாயிகள் அக்கவுண்டில் கொட்டப்போகும் பணம்.! 15ம் தேதி அடிக்கப்போகுது ஜாக்பாட்! அரசு சூப்பர் அறிவிப்பு
Recommended image2
1000 யூனிட் வரை இலவச மின்சாரம்.! யாருக்கெல்லாம்? குஷியில் துள்ளிக்குதிக்கும் தொழிலாளர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved