MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுகவின் 164 பிளான்.. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்? உத்தேச பட்டியல் இதோ!

திமுகவின் 164 பிளான்.. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்? உத்தேச பட்டியல் இதோ!

சட்டப்பேரவை தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? என்பது குறித்த உத்தேச பட்டியலை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Feb 19 2026, 07:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டப்பேரவை தேர்தல்
Image Credit : X/@arivalayam

தமிழக சட்டப்பேரவை தேர்தல்

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆளுங்கட்சியான திமுக, ஆண்ட கட்சியான அதிமுக, தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் பாஜக, பெரும் நம்பிக்கையுடன் களமிறங்கும் விஜய்யின் தவெக தேர்தல் பணிகளில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றன. திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற இலக்கு வைத்துள்ள நிலையில், அந்த கூட்டணியில் தேமுதிகவும் இன்று ஐக்கியமாகியுள்ளது.

25
திமுக கூட்டணி உத்தேச பட்டியல்
Image Credit : Asianet News

திமுக கூட்டணி உத்தேச பட்டியல்

பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக செல்லும் என எதிர்பார்த்த நிலையில், திமுக பக்கம் சாய்ந்துள்ளது தேமுதிக. இந்த நிலையில், திமுக கூட்டணியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதாவது திமுக மட்டும் தனியாக 164 தொகுதிகளில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. மீதமுள்ள 70 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Related Articles

Related image1
பிரசார யுக்தி.! திமுக சார்பில் களம் இறங்கும் சினிமா பட்டாளம்.?! கட்சி கொள்கைகள் குறித்து பாடம் எடுக்கும் பணியை துவக்கிய மா.செக்கள்.?!
Related image2
துணை முதல்வர் கனவில் திருமா! 40 தொகுதிகளுக்கு 'அடி' போடும் இடதுசாரிகள் - ஆட்டம் காணும் திமுக கோட்டை?
35
காங்கிரஸ், தேமுதிகவுக்கு எவ்வளவு?
Image Credit : X/Twitter

காங்கிரஸ், தேமுதிகவுக்கு எவ்வளவு?

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தொ.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 10 முதல் 12 சீட்டுகள் வரை ஒதுக்கப்படலாம். திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 7 அல்லது 8 சீட்டுகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட உள்ளது. வைகோவின் மதிமுகவுக்கு 5 சீட்டுகள் கொடுக்கப்படலாம். இடது சாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 5 சீட்டுகள் ஒதுக்கப்படலாம்.

45
கமல்ஹாசன் கட்சிக்கு எத்தனை சீட்?
Image Credit : Asianet News

கமல்ஹாசன் கட்சிக்கு எத்தனை சீட்?

மனிதநேய மக்கள் கட்சிக்கு 4 சீட்டுகளும், முஸ்லீம் லீக் கட்சிக்கு 4 சீட்டுகளும் கிடைக்கலாம். நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என தெரிகிறது. மேலும் கொங்கு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகளும், எஸ்டிபிஐ கட்சிக்கு 1 தொகுதியும் திமுக கொடுக்கும் என தகவல்கள் கூறுகின்றன.

55
காங்கிரஸ் இருக்குமா? வெளியேறுமா?
Image Credit : x

காங்கிரஸ் இருக்குமா? வெளியேறுமா?

ஆனால் இது உத்தே பட்டியல் தான். ஏனெனில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா? இல்லை திமுகவை முறித்துக் கொண்டு தவெகவுடன் இணையுமா? என்று உறுதியாக தெரியவில்லை. அப்படி ஒருவேளை காங்கிரஸ் வெளியேறினால் விசிக, மதிமுக, இடதுசாரி கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படும். காங்கிரஸின் முடிவு என்ன? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக கூட்டணி கட்சிகள்
திமுக
தமிழ்நாடு
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திமுக எம்எல்ஏ-வின் குடும்பம் ஆரம்பித்த ’சர்வதேச’ புதுக்கட்சி..! கைவிட்ட அறிவாலயம்.. கைகொடுக்குமா சாதி கட்சி..?
Recommended image2
காங்கிரஸுக்கு செக் வைத்த ஸ்டாலின்... ஆதாரங்களை திரட்டிய அறிவாலயம்..! ஆடிப்போன செல்வப்பெருந்தகை..!
Recommended image3
வெயில் வந்தாச்சு.. சென்னைக்கு பக்கத்துலயே 3 'ஜில் ஜில்' ஸ்பாட்ஸ்.. ஊட்டியே தோத்துடும்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Related Stories
Recommended image1
பிரசார யுக்தி.! திமுக சார்பில் களம் இறங்கும் சினிமா பட்டாளம்.?! கட்சி கொள்கைகள் குறித்து பாடம் எடுக்கும் பணியை துவக்கிய மா.செக்கள்.?!
Recommended image2
துணை முதல்வர் கனவில் திருமா! 40 தொகுதிகளுக்கு 'அடி' போடும் இடதுசாரிகள் - ஆட்டம் காணும் திமுக கோட்டை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved