MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்

தென் மாவட்ட மக்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அலர்ட்.! அடிச்சு ஊத்தப்போகும் மழை.! முக்கிய அப்டேட்

தமிழகத்தில் கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டி வாட்டி வதைத்து வரும் நிலையில், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்  மழை எச்சரிக்கை.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 13 2026, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

கோடைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து தமிழகம் முழுவதும் வெயில் ருத்தரதாண்டவம் ஆடிவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதற்கே அலறுகின்றனர். குறிப்பாக வேலூர், கரூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. மேலும் பொதுமக்கள் குறிப்பாக பெரியவர்கள், சிறுவர்கள் தேவையில்லாமல் வெயில் நேரங்களில் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் நீர்சத்து பொருட்களான தர்பூசணி, இளநீர் மற்றும் தண்ணீர் போன்றவை அதிக குடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலுக்கு இடையே எப்போது மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்துகிடக்கின்றனர்.

25
Image Credit : Asianet News

இந்நிலையில் இன்று முதல் 18ம் தேதி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

Related Articles

Related image1
உஷார் மக்களே! 3 நாள் பொளக்கப்போகும் வெயில்.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் இதோ!
Related image2
குமரி, நெல்லையில் விடாமல் ஊத்தப்போகும் கனமழை.. சென்னையின் நிலவரம் என்ன?
35
Image Credit : Asianet News

இன்று முதல் 16 வரை உள் தமிழக மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். கடலோர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

45
Image Credit : Asianet News

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
Image Credit : Asianet News

இந்நிலையில் கடும் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் அடுத்த 3 மணிநேரத்திறற்கு அதாவது காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
வெப்ப அலை
தமிழ்நாடு வானிலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு பணியில் இருந்து எதற்காக நீக்கம்... யார் இந்த சவுக்கு சங்கர்? இவருக்கும் எம்.பி. சசிகாந்த் செந்திலுக்கும் என்ன உறவு தெரியுமா?
Recommended image2
Now Playing
சென்னையில் மாஸ் பிரச்சாரம்! நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay
Recommended image3
ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதா? கவலை வேண்டாம்.. மீண்டும் புதுப்பிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறை!
Related Stories
Recommended image1
உஷார் மக்களே! 3 நாள் பொளக்கப்போகும் வெயில்.. எந்தெந்த மாவட்டங்கள்? முழு விவரம் இதோ!
Recommended image2
குமரி, நெல்லையில் விடாமல் ஊத்தப்போகும் கனமழை.. சென்னையின் நிலவரம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved