MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 6 முதல் 60 வரை வயசு வித்தியாசம் இல்லாமல் குத்தாட்டம் போடும் தொண்டர்கள்! நள்ளிரவிலேயே குவிந்த TVK பேன்ஸ்

6 முதல் 60 வரை வயசு வித்தியாசம் இல்லாமல் குத்தாட்டம் போடும் தொண்டர்கள்! நள்ளிரவிலேயே குவிந்த TVK பேன்ஸ்

மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் 2வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக நள்ளிரவு முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து வருவதால் மாநாட்டு திடல் விழா கோலம் பூண்டுள்ளது.

2 Min read
Author : Velmurugan s
Published : Aug 21 2025, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு
Image Credit : Asianet News

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரப்பத்தி பகுதியில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நீங்கள் வேண்டுமானால் 3 மணிக்கு மாநாட்டைத் தொடங்கிக் கொள்ளுங்கள், ஆனால் எங்களுக்கு கொண்டாட்டம் சுமார் 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கி விட்டது என்று சொல்வது போல் தளபதி விஜய்யின் ரசிகர்கள் நள்ளிரவு முதலே மாநாட்டு திடலில் குவியத் தொடங்கி உள்ளனர்.

24
ஸ்நாக்ஸ் கிட்
Image Credit : TVK Vijay

ஸ்நாக்ஸ் கிட்

மாநாடு தொடங்கும் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தொண்டர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக ஸ்னேக்ஸ் பேக் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிட்டில் பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் உள்ளிட்டவை அடங்கிய பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் 2 பார்க்கிங் வசதிகளுடன் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

விடிவதற்குள் மதுரை மாநாட்டு திடல் ஃபுல் ஆக்கிருவாங்ய போல தோழர்கள் 💥🔥 

பேருந்து வசதி இல்லாட்டியும் நடந்தே படை எடுத்து வராங்ய 💪

உங்க அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை 🙏🤌 #TVKMaduraiMaanadupic.twitter.com/tScvvIs7Rp

— Voice of TVK (@risingoftvk) August 21, 2025

Related Articles

Related image1
Now Playing
மதுரை தவெக மாநாட்டில் மெகா ட்விஸ்ட் ! மேடையில் சிரிக்கும் எம்ஜிஆர்...விஜய்யின் அரசியல் திருப்பம் !
Related image2
தவெக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்துக்கு என்ன காரணம்? பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டாரா விஜய்?
34
சாரை சாரையாக வரும் தொண்டர் படை
Image Credit : Asianet News

சாரை சாரையாக வரும் தொண்டர் படை

மாநாடு தொடங்க இன்னும் பல மணிநேரம் உள்ள நிலையில் தொண்டர்கள் தாங்கள் வந்த வாகனங்களை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு சுமார் 2 கிமீ தூரம் நடந்து சென்று மேடைக்கு அருகே செல்லும் காட்சிகளை நாம் பார்க்க முடிகிறது.

தமிழ்நாட்டு மக்கள் எங்கள் தளபதியின் மேல் வைத்துள்ள பாசத்திற்கும் அன்பிற்கும் எடுத்துக்காட்டாய் இன்று மதுரை மாநாடு இருக்கும். இது ஒன்றும் அரசியல் மாநாட்டிற்கான கூட்டம் கிடையாது நாளைய தமிழகத்தின் அரசியல் புரட்சி க்கான கூட்டம்.@TVKVijayHQ#TVKMaduraiMaanadupic.twitter.com/OpTbgnK4aI

— M.Raja_TVK (@IamRaja2403_Off) August 21, 2025

44
விழாகோலம் பூண்ட மதுரை
Image Credit : Asianet News

விழாகோலம் பூண்ட மதுரை

மாநாட்டில் தொண்டர்கள் அமர்வதற்காக சுமார் 1.5 லட்சம் நாற்காலிகள் அமைக்கப்பட்டுள்ளன. யாருக்கேனும் உடல் நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் 8 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு இன்று மாலை தான் தொடங்கும் என்ற நிலையில் நள்ளிரவு முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கியதால் தற்போதே மாநாட்டு திடல் விழாக்கோலம் பூண்டுள்ளது.

மதுரையை நோக்கி படையெடுக்கும் தென்மாவட்ட வாகனங்கள்.

மதுர குலுங்க குலுங்க சம்பவம் உறுதி.🔥✨️#TVKMaduraiMaanadu#TVKVijay#TVK#தமிழகவெற்றிக்கழகம்pic.twitter.com/raT69eprSm

— balaa.TVK. (@BalaaTvk) August 21, 2025

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டிவி.கே. விஜய்
தமிழக வெற்றி கழகம்
மதுரை

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
Now Playing
மதுரை தவெக மாநாட்டில் மெகா ட்விஸ்ட் ! மேடையில் சிரிக்கும் எம்ஜிஆர்...விஜய்யின் அரசியல் திருப்பம் !
Recommended image2
தவெக கொடிக்கம்பம் சாய்ந்த விபத்துக்கு என்ன காரணம்? பாதுகாப்பு ஏற்பாட்டில் கோட்டை விட்டாரா விஜய்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved