MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டு..? எந்த கூட்டணியில் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்

தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டு..? எந்த கூட்டணியில் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்

ராஜ்ய சபா தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கணக்குகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களுக்கு என்று ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது.

2 Min read
Author : Thiraviya raj
Published : Feb 18 2026, 03:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திமுக சார்பாக யார் யாரெல்லாம் போட்டி?
Image Credit : Asianet News

திமுக சார்பாக யார் யாரெல்லாம் போட்டி?

தமிழகத்தில் ஆறு மாநிலங்களவைக்கான இடங்கள் இருக்கிறது. அதற்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தில் திமுக சார்பாக யார் யாரெல்லாம் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

32 எம்எல்ஏக்கள் கொண்ட ஒருவருக்கு ஒரு எம் பி சீட் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையில் திமுகவிற்கு தற்போது இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைப்படி பார்த்தால் நான்கு பேர் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. வழக்குகளை கையாளும் என்னால் என்.ஆர்.இளங்கோவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்கிறார்கள். அந்தியூர் செல்வராஜுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என்று கூறப்படுகிறது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அவருக்கு ஏற்கனவே பலமுறை வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்கிறார்கள்.

24
புதியவர்களுக்கு வாய்ப்பு
Image Credit : X/@arivalayam

புதியவர்களுக்கு வாய்ப்பு

அதேபோல திருச்சி சிவாவுக்கு பலமுறை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால் அவருக்கு இந்த முறை வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், திருச்சி சிவாவுக்கு திமுக தலைமையிடம் நெருக்கம் உள்ளது. அவரும் மு.க.ஸ்டாலினும் இளைஞரணியில் ஒன்றாக பயணித்தவர்கள். அவருக்கு மீண்டும் ராஜ்யசபா சீட் கொடுக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள். காங்கிரசுக்கு 17 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் தங்களுக்கும் ஒரு சீட் வேண்டும் என்று கேட்கிறார்கள். கனிமொழி வி.என் சோமு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவதால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட மாட்டாது என்று தெரிகிறது.

அவருக்கு பதிலாக மற்றொரு பெண்ணுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். பலரும் இந்த போட்டியில் இருந்து வரும் நிலையில் ராஜ்யசபாவுக்கான விருப்பம் மனுவை பலரும் முதலமைச்சரிடம் கொடுத்து இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் நான்கு பேரை முதலமைச்சர் அறிவிப்பார். ஒன்று அல்லது இரண்டு சீட்டுகள் கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கப்படும் என்று அறிவாலயம் வட்டாரத்தினர் கூறுகின்றனர். தேமுதிக கூட்டணிக்கு வந்தால் ஒரு இடம் கொடுக்கப்பட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
இஸ்லாமிய சமூகத்திற்கு பேரிடி..! 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக அரசு..!
34
தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?
Image Credit : Asianet News

தேமுதிகவுக்கு ஒரு சீட்டு?

தேமுதிகவுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் பிரேமலதா ஒரு ராஜ்யசபா சீட்டை கேட்டு வருகிறார். இந்த ஆண்டு நடைபெறக்கூடிய இந்த ராஜ்ய சபா தேர்தல் முக்கியமான தேர்தல். ஏனென்றால் கூட்டணி கட்சிகளை உருவாக்குவதற்கும், கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கும் இது முக்கியமாக பார்க்கப்படுகிறது. கூட்டணிக்கு வரும் கட்சிகள் தங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றன. ராஜ்யசபா தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் ஒன்றோடு ஒன்று இணைந்ததாக இருக்கும் என்கிறார்கள்.

44
பெண் வேட்பாளர் யார் ?
Image Credit : Google

பெண் வேட்பாளர் யார் ?

அதேபோல அதிமுகவிடம், தேமுகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று 2025 ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை கொடுத்து விட்டார். எனவே இந்த முக்கியமான ராஜ்ய சபா தேர்தல் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கணக்குகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தங்களுக்கு என்று ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது. வைகோவுக்கு கடந்தமுறை ராஜ்ய சபா சீட் கொடுக்கப்பட்டது. இந்த முறை வாய்ப்பில்லை. எனவே கூட்டணி கட்சிகளுக்கு இரண்டு இடங்களை கொடுத்துவிட்டு, மற்ற இரண்டு இடங்களை திமுகவே வைத்துக் கொள்ளும். அதில் என்.ஆர்.இளனஙகோவனுக்கு ஒரு சீட்டு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மற்றொரு பெண் வேட்பாளர் யார் என்று கேள்வி எழுந்திருக்கிறது.

About the Author

TR
Thiraviya raj
திமுக கூட்டணி கட்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!
Recommended image2
இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. டாஸ்மாக் கடையை மூட சொன்னா பெண்களை இப்படி துன்புறுத்துவீங்களா! கொதிக்கும் அன்புமணி
Recommended image3
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Related Stories
Recommended image1
இஸ்லாமிய சமூகத்திற்கு பேரிடி..! 5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த பாஜக அரசு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved