MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இது அரசு பேருந்தா! இல்ல பிளைட்டா.! அடேங்கப்பா.! இவ்வளவு வசதி இருக்கா..

இது அரசு பேருந்தா! இல்ல பிளைட்டா.! அடேங்கப்பா.! இவ்வளவு வசதி இருக்கா..

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்காக அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தனர். இருக்கை மற்றும் படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த புதிய பேருந்துகளில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jan 06 2026, 01:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போக்குவரத்து வசதிகள்
Image Credit : Asianet News

போக்குவரத்து வசதிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார். போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதோடு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய பேருந்து முனையங்கள் அமைத்தல், பேருந்து நிலையங்களை பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளோடு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்.

25
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
Image Credit : Asianet News

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்

அதனடிப்படையில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் முக்கிய நகரங்களுக்கு அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் பொதுமக்களுக்கும், பணிகளுக்காக பல்வேறு நகரங்களுக்கு செல்லும் இளைஞர்களுக்கும் பாதுகாப்பான பயணத்திற்கான முதன்மைத் தேர்வாக விளங்கி வருகின்றன.

Related Articles

Related image1
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
Related image2
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களே ரெடியா.! 1,50,000 ரூபாயை அள்ளிக்கொடுக்கப்போகுது தமிழக அரசு! வெளியான ஹேப்பி நியூஸ்!
35
அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்து
Image Credit : Asianet News

அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்து

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டிசம்பர் 24ம் தேதியன்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு 34.30 கோடி ரூபாய் மதிப்பிலான பல அச்சுகள் (MULTI-AXLE) கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகையில் கீழ்கண்ட சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டு உள்ளன.

45
சிறப்பு அம்சங்கள்
Image Credit : Asianet News

சிறப்பு அம்சங்கள்

* இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில், பயணிகளின் சொகுசு பயணத்திற்காக முன்புற Air Suspension வசதி செய்யப்பட்டுள்ளது.

* படுக்கை வசதி அதிகரித்த இடம் மற்றும் இரண்டு படுக்கைகளுக்கு இடையே தடுப்பு வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* ஒவ்வொரு இருக்கை மற்றும் படுக்கைக்கும் தனித்தனியாக தனிப்பட்ட சார்ஜிங் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.

* ஒவ்வொரு படுக்கைக்கும் தனித்தனியாக பயணிகள் வசதிக்காக தனித்தனி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.

* பயணிகளின் பாதுகாப்பிற்காக ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் அபாய ஒலி எழுப்பி (SOS) அமைக்கப்பட்டுள்ளது.

* நடத்துனர் பயணிகளுக்கு தகவல்களை அறிவிப்பதற்காக ஒலி பெருக்கி (Micro Phone) அமைக்கப்பட்டுள்ளது.

55
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Image Credit : Asianet News

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

* பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் கடிகராம் அமைக்கப்பட்டுள்ளது.

* பயணிகளின் சுமை பெட்டி மற்றும் சரக்கு பார்சலுக்காகவும் போதிய இட வசதியுடன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

* அரசு நிர்ணயம் செய்த அளவுகளின் அடிப்படையில் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்துகளின் Engine என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* மேம்படுத்தப்பட்ட பிரேக்கிங் செயல் திறனுக்காக நவீன எலக்ட்ரானிக் மேக்னடிக் ரிடார்டர் (EMR) நிறுவப்பட்டுள்ளது.

* இன்ஜின் தீயை முன் கூட்டியே திறம்பட அனுமானித்து, தீ கட்டுபாட்டு அமைப்பு (FDSS) கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தீவுத்திடலில் இன்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் 37.98 கோடி ரூபாய் மதிப்பிலான இருக்கை மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய 61 அதிநவீன புதிய பேருந்துகளின் இயக்கத்தை, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
சென்னை
திமுக
உதயநிதி ஸ்டாலின்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வங்கக்கடலில் புயல்? தமிழகத்தில் ஓயாமல் ஊத்தப்போகும் மழை.. வானிலை கொடுத்த சூப்பர் அப்டேட்!
Recommended image2
அடேங்கப்பா.! சென்னை மத்திய கைலாஷ் L வடிவ மேம்பாலம்! இவ்வளவு சிறப்பு அம்சங்கள் இருக்கா.!
Recommended image3
நயினார் எந்த பெண்ணின் மனம் புண்படும் வகையில் பேசினாரோ.. அந்த பெண்ணிடம்.. எம்.பி.சுதா சரவெடி!
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு குட்நியூஸ்! அரசே காசு கொடுக்குது! டாஸ்மாக் கடை விற்பனையில் அதிரடி மாற்றம்!
Recommended image2
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களே ரெடியா.! 1,50,000 ரூபாயை அள்ளிக்கொடுக்கப்போகுது தமிழக அரசு! வெளியான ஹேப்பி நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved