MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திருச்சி
  • நீண்ட நேரமாகியும் திறக்காத கதவு! உள்ளே சென்று பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

நீண்ட நேரமாகியும் திறக்காத கதவு! உள்ளே சென்று பார்த்த போலீசுக்கு காத்திருந்த அதிர்ச்சி! நடந்தது என்ன?

திருச்சியில் கடன் தொல்லையால் துணிக்கடைக்காரர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 14 2025, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி
Image Credit : our own

கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி

திருச்சி மாவட்டம் மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் பகுதியில் வசித்து வந்தவர் அலெக்ஸ். துணிக்கடையை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி விக்டோரியா. இவர் ரயில்வே ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஆராதனா(9), ஆலியா(3) ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னம் வழியாக எட்டி பார்த்த போது மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

23
கடன் தொல்லையால் தற்கொலை
Image Credit : Google

கடன் தொல்லையால் தற்கொலை

அப்போது அலெக்ஸ் மற்றும் விக்டோரியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டனர். மற்றொரு அறையில் இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்தனர். இதனையடுத்து 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு தகவல்கள் வெளியாகின. அலெக்ஸ்க்கு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் போதிய வருமானம் இல்லாததால் கடன் அதிகரித்துள்ளது. கடன் கொடுத்தவர்களும் பணத்தை கேட்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் வேறு வழியில்லாமல் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related Articles

Related image1
மகளிருக்காக கொத்து கொத்தான சூப்பர் திட்டங்கள்! லிஸ்ட் போட்ட திமுக அரசு!
Related image2
கொளுத்தும் கோடையில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
33
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை
Image Credit : Google

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தற்கொலை

முதலில் தங்களது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு பின்னர் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திருச்சி
காவல் நிலையம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.! டிசம்பர் 30-ம் தேதி விடுமுறை.! என்ன காரணம் தெரியுமா?
Recommended image2
ஸ்ரீரங்கம் யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொ*லை.! வெளியான அதிர்ச்சி காரணம்!
Recommended image3
திருச்சியில் முதல்வர் இருக்கும் போதே பயங்கரம்! காவலர் குடியிருப்பில் இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொ*லை! அலறி ஓடிய பொதுமக்கள்
Related Stories
Recommended image1
மகளிருக்காக கொத்து கொத்தான சூப்பர் திட்டங்கள்! லிஸ்ட் போட்ட திமுக அரசு!
Recommended image2
கொளுத்தும் கோடையில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved