MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது! மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக்கில் ஏதோ தவறு நடக்கிறது! மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன அதிர்ச்சி தகவல்!

டாஸ்மாக் ஊழியர்கள் மாமூல் குறித்து புகார் அளித்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். உயர் நீதிமன்றம் இடைநீக்கத்தை ரத்து செய்து, டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் நடப்பதாகக் குறிப்பிட்டது.

2 Min read
Author : vinoth kumar
Published : May 26 2025, 07:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாஸ்மாக் ஊழியர்கள் பணி இடைநீக்கம்
Image Credit : our own

டாஸ்மாக் ஊழியர்கள் பணி இடைநீக்கம்

மதுரையைச் சேர்ந்த மாயக்கண்ணன், முருகன், ராமசாமி ஆகிய மூன்று பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், நாங்கள் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறோம். டாஸ்மாக்கில் நடக்கும் மாமூல் குறித்தும் புகார் அளித்தோம். ஊடகங்களில் பேட்டி அளித்தோம். ஆகையால் டாஸ்மாக் நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி எங்களை பணியிடை நீக்கம் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்தது சட்டவிரோதம். இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

24
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
Image Credit : our own

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதுதொடர்பான வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பிர் ஆஜரான வழக்கறிஞர் மதுரை மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணியாற்றிய ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மாக் மேற்பார்வையாளராக பணியாற்றிய செல்வமும் இணைந்து ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் தினமும் 5,000 ரூபாய் வசூல் செய்தனர். இதன் காரணமாக டாஸ்மாக் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள். ஆகையால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மனுதாரர்கள் புகார் அளித்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஊடகங்களில் பேட்டியளித்தனர் என்ற வாதிட்டார்.

Related Articles

Related image1
கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?
Related image2
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
34
டாஸ்மாக் ஊழியர்களின் இடைநீக்கம் ரத்து
Image Credit : our own

டாஸ்மாக் ஊழியர்களின் இடைநீக்கம் ரத்து

இதனையடுத்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் மேலாளர் ராஜேஸ்வரியும், ஊழியர் செல்வமும் இணைந்து வசூல் வேட்டை நடத்தி இருக்கின்றனர். அவர்கள் பேசிய உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு மனுதாரர்கள் அனுப்பி இருக்கிறார்கள். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் ஊடகங்களுக்கு பேட்டியளித்து இருக்கின்றனர். இது டாஸ்மாக் விதிமுறைகளுக்கு எதிரானது என்றாலும் இதே நேரத்தில் மேலாளர் ராஜேஸ்வரி உடனடியாக அவர் பணிபுரிந்த துறைக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார். இவற்றையெல்லாம் பார்க்கும் போது டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ நடக்கிறது தெரிகிறது. கள்ளச்சாராயத்தால் ஏற்படும் இறப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் நிறுவனத்தை நடத்துகிறது. எனவே, இந்த துறையில் ஊழல்களை அனுமதிக்க கூடாது.

44
டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது
Image Credit : our own

டாஸ்மாக்கில் ஏதோ நடக்கிறது

ஊழல் குற்றச்சாட்டுகளில் கிடைக்கக்கூடிய ஆவணங்களை பார்க்கும்போது மொத்த டாஸ்மாக்கிலும் ஏதோ நடக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. டாஸ்மாக் துறை தனது தவறுகளை உணர வேண்டும் என்று கூறி மனுதாரர்கள் மீது ஏற்கனவே எடுத்த நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார். ஏற்கனவே டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய் ஊழல் தொடர்பான வழக்கில் டாஸ்மாக் மீதான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு
நீதிமன்றம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
Recommended image2
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?
Recommended image3
தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?
Related Stories
Recommended image1
கோர விபத்து! பஸ்ஸே இப்படி அப்பளம் போல் நொறுங்கி போயிருக்குன்னா! 17 பயணிகளின் கதி என்ன?
Recommended image2
தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்? வானிலை மையம் கொடுத்த அப்டேட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved