MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • டெல்லியில் இருந்து அமித் ஷா பிளைட் ஏறினாலே திமுகவுக்கு பயம் தான்! நயினார் நாகேந்திரன்!

டெல்லியில் இருந்து அமித் ஷா பிளைட் ஏறினாலே திமுகவுக்கு பயம் தான்! நயினார் நாகேந்திரன்!

மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பில் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. நைனார் நாகேந்திரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 2026 தேர்தலில் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 12 2025, 05:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
பாஜக ஆர்ப்பாட்டம்
Image Credit : x/nainar nagendran

பாஜக ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பில் ஏற்பட்ட பலகோடி ரூபாய் மோசடியை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மதுரை மாநகர் சார்பில் இன்று புதூர் பேருந்து நிலைய வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகையில்: தமிழகத்தில் ஒரு தவறு நடைபெறுகிறது என்றால் அதை சுட்டிக்காட்டுகின்ற கட்சியாக அதை தடுத்து நிறுத்தக்கூடிய கட்சியாக கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற அதிமுகவும் பாஜகவும் தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்து வருகிறது. காரணம் திமுக தலைவர் ஓரணியின் தமிழகம் வீடு வீடாக செல்கின்றனர். தோல்வி பயம் காரணமாக ரோட் ஷோ நடத்துகின்றனர். அமித்ஷா அவர்களே பார்த்தாலே திமுகவினர் பயப்படுகின்றனர்.

24
அமித்ஷா என்றாலே திமுகவுக்கு பயம்
Image Credit : ANI

அமித்ஷா என்றாலே திமுகவுக்கு பயம்

தமிழகத்துக்கு வருவதற்கு டெல்லியில் இருந்து விமானம் ஏறுகின்றார் என்று செய்தி கேட்டால் திமுகவினர் பயப்படுகினர். வேங்கை வயல் பிரச்சனை குறித்து திருமாவளவன் ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியில் இடது கம்யூனிஸ்ட் அவ்வப்போது குரல் எழுப்புகின்றனர். கூட்டணியில் இருந்து கொண்டு தவறு நடக்கும்போது தட்டி கேட்கிறார் என்றால் அது ஒரு நல்ல விஷயமாக தடுக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள். காங்கிரஸ் என்கின்ற ஒரு கட்சி தமிழகத்தில் இருக்கின்றதா இல்லையா என்று யாருக்குமே தெரியவில்லை. 2026ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களே குஷியான அறிவிப்பு வந்தாச்சு! ஜூலை 14ம் தேதி விடுமுறை!
Related image2
மழை ஊத்து ஊத்துனு ஊத்தப்போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில்? எந்த நாளில் தெரியுமா?
34
திமுகவே வீட்டிற்கு அனுப்புவோம்
Image Credit : x/nainar nagendran

திமுகவே வீட்டிற்கு அனுப்புவோம்

மீனாட்சி அம்மையின் ஆட்சி தமிழகத்தில் நிச்சயம் மலரும். வீடுகளுக்கு உரிய வரி விதிப்பில் மாபெரும் ஊழல் செய்திருக்கிறார்கள். மதுரை மட்டுமல்ல சிவகங்கை மாவட்டத்திலும் திமுகவினர் இன்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. திமுகவை சேர்ந்த தொழிலதிபரிடம் ஏழு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. மதுரை துணை மேயர் நாகராஜன் பொதுமக்கள் நடமாடும் பாதையவே ஆக்கிரமிப்பு செய்து வீடு பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இவ்வாறாக எதிலும் எல்லாவற்றிலும் ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவற்றைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள் இந்த மதுரை மண் சாதாரண மண் கிடையாது நீதி கேட்டு போராடிய கண்ணகி வாழ்ந்த மண் இது. ஓரணியில் தமிழகம் என்கின்ற நிலையை மாற்றி கண்ணகி போராடிய இந்த மதுரை மண்ணிலிருந்து கூறுகிறேன் நிச்சயம் திமுகவே வீட்டிற்கு அனுப்புவோம் என்று சொல்லி தனது கண்டன உரையை நைனார் நாகேந்திரன் நிறைவு செய்தார்.

44

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிஜேபி
தமிழ்நாடு
அரசியல்
நயினார் நாகேந்திரன்
மதுரை
அமித் ஷா
திமுக
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
Recommended image2
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?
Recommended image3
தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?
Related Stories
Recommended image1
பள்ளி மாணவர்களே குஷியான அறிவிப்பு வந்தாச்சு! ஜூலை 14ம் தேதி விடுமுறை!
Recommended image2
மழை ஊத்து ஊத்துனு ஊத்தப்போகுதாம்! எந்தெந்த மாவட்டங்களில்? எந்த நாளில் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved