MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கன்னியாகுமாரி
  • 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Oct 25 2024, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Heavy Rain

Heavy Rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வங்ககக்கடலின் மத்திய மேற்கு திசையில் நிலை கொண்டிருந்த டானா புயல், நேற்று தீவிர புயலாக வலுபெற்றது. இதனிடையே தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
Heavy Rain

Heavy Rain

மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 30ம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமானது முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் இன்று கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், நெல்லை, தென்காசி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும்,

34
School Leave

School Leave

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழைய பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
Heavy Rain

Heavy Rain

இதனிடையே கனமழை பெய்யும் மாவட்டங்களில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கனமழை
மழை செய்திகள்
பள்ளிகள் விடுமுறை
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கன்னியாகுமரி சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! நவீன 3 புதிய பயணிகள் படகு.! என்னென்ன வசதி இருக்கு தெரியுமா?
Recommended image2
குஷியில் துள்ளிக்குதிக்கும் அரசு ஊழியர்கள்.. கிறிஸ்மஸ்க்கு இரண்டு நாள் விடுமுறை அறிவிப்பு
Recommended image3
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அட்மிஷன் துவக்கம்: 50+ பாடங்கள், தேர்வு முறை, முக்கிய தேதிகள்- முழுவிவரம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved