MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதான்! வெளியான முக்கிய தகவல்!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் தேதி இதுதான்! வெளியான முக்கிய தகவல்!

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? என்பது குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 11 2025, 08:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IPL 2025 Resumption Date to be Announced Today

IPL 2025 Resumption Date to be Announced Today

ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக கடந்த 8ம் தேதி நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால் ஐபிஎல் 2025 போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

24
ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு

ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைப்பு

'பெரும்பாலான உரிமையாளர்கள் தங்கள் வீரர்களின் கவலை மற்றும் உணர்வுகளையும், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துக்களையும் தெரிவித்ததைத் தொடர்ந்து, அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் உரிய ஆலோசனைக்குப் பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது. இதற்கிடையே ஒரு வாரத்துக்கு பிறகு எந்தவித பதற்றமும் இன்றி அமைதியாக காணப்படும் தென்மாநிலங்களான சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.

ஐபிஎல் மீண்டும் தொடங்குவது எப்போது?

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. எந்தவித ட்ரோன் தாக்குதல், பீரங்கி தாக்குதல் நடைபெறாததால் ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய எல்லையோர மாநிலங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளன. இதனால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Related Articles

Related image1
தென்னிந்தியாவில் இந்த '3' நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு? முழு விவரம்!
Related image2
ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!
34
ஐபிஎல் தலைவர் அருண் துமல் சொன்னது என்ன?

ஐபிஎல் தலைவர் அருண் துமல் சொன்னது என்ன?

இது தொடரபாக நேற்று இரவு பேசிய ஐபிஎல் தலைவர் அருண் துமல், ''போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. நாங்கள் அணிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகியோரிடம் பேசி ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவு செய்வோம். மிக முக்கியமாக மத்திய அரசிடம் இது தொடர்பாக ஆலோசிக்கப்படும்'' என்று தெரிவித்தார். 

பிசிசிஐ, ஐபிஎல் அதிகாரிகள் ஆலோசனை 

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை மீண்டும் தொடங்குவது குறித்து பிசிசிஐ அதிகாரிகளும், ஐபிஎல் நிர்வாக குழுவினரும் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி இன்று நடைபெறும் கூட்டத்தில் ஐபிஎல்லில் மீதமிருக்கும் போட்டிகளின் அட்டவணை உறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

44
புதிய ஐபிஎல் போட்டி அட்டவணை

புதிய ஐபிஎல் போட்டி அட்டவணை

ஐபிஎல்லில் விளையாடும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்துள்ளதால் அதற்குள் ஐபிஎல் போட்டிகளை தொடங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அநேகமாக அடுத்த வாரம் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும் வகையில் அட்டவணை தயார் செய்யப்படும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
இந்தியா-பாகிஸ்தான் போர்
ஆபரேஷன் சிந்தூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Recommended image3
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. பின்னணி காரணம் இதுதான்!
Related Stories
Recommended image1
தென்னிந்தியாவில் இந்த '3' நகரங்களில் ஐபிஎல் போட்டிகளை நடத்த முடிவு? முழு விவரம்!
Recommended image2
ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved