MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • அட! விராட் கோலிக்கே பிடிச்சது நம்ம சிம்பு பாட்டு தானாம்! எந்த 'சாங்' தெரியுமா?

அட! விராட் கோலிக்கே பிடிச்சது நம்ம சிம்பு பாட்டு தானாம்! எந்த 'சாங்' தெரியுமா?

விராட் கோலி நடிகர் சிம்புவின் படத்தில் இடம்பெற்ற பாடலை, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.  

2 Min read
Author : Rayar r
Published : May 02 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14


Virat Kohli's favorite Simbu song: இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டையும் ஆள்பவர் கிரிக்கெட் கிங் எனப்படும் விராட் கோலி. கிரிக்கெட்டில் விராட் கோலி செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்டாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வருகிறார் விராட் கோலி. நடப்பு ஐபிஎல் தொடரில் 'ரன் மெஷின்' போன்று ரன்களை குவித்து வரும் விராட் கோலி இதுவரை 10 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ளார்.

24
Virat Kohli's favorite song

Virat Kohli's favorite song

ஐபிஎல் தொடரில் அசத்தும் ஆர்சிபி 

விராட் கோலியின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் ஆர்சிபி அணியும் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் வீற்றிருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், இந்த முறை கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல் 

இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு பேட்டியளித்த விராட் கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கை, ஐபிஎல் அனுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டியின்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, ''இந்த பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல், "நீ சிங்கம் தான்" என்று கூறியுள்ளார்.

Related Articles

Related image1
இது நம்ப லிஸ்டுலையே இல்லையே.! மீண்டும் மன்மதனாக மாறும் சிம்பு? இரண்டாம் பாகத்திற்கு பக்கா பிளான் போட்ட STR!
Related image2
விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை இத்தனை ஆயிரமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
34
Virat Kohli and Simbhu

Virat Kohli and Simbhu

'நீ சிங்கம்தான்' பாடல் 

அதாவது விராட் கோலி, நடிகர் சிம்புவின் "பத்து தல" படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம்தான்" பாடலை தான் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "நீ சிங்கம்தான்" பாடல் ஏற்கெனவே இந்தியா முழுவதும் செம ஹிட் ஆனது. இப்போது விராட் கோலியே இந்த பாடலை கேட்கிறேன் என கூறியுள்ளதன் மூலம் இந்த பாடல் இந்தியா  முழுவதும் வைரலாகி வருகிறது.

நெகிழ்ந்துபோன சிம்பு

விராட் கோலியின் இந்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்பு, 'நீ சிங்கம் தான்' என்று கூறி பாராட்டு மழை பொழிந்துள்ளார். ஒரு தமிழ் பாட்டை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று விராட் கோலி கூறியுள்ளது விராட் கோலி ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'நீ சிங்கம் தான்' என்ற பாடலின் பின்னணியில் விராட் கோலிக்கு வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

44
Dhoni and Virat kohli

Dhoni and Virat kohli

தோனிக்கு ஒலிபரப்பு செய்யப்படும் பாடல் 

சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது நீ சிங்கம் தான்' பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்படும். இப்போது கோலியே இந்த பாடலை பிடித்துள்ளது என கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விராட் கோலி
சிலம்பரசன்
ஐபிஎல்
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
"பாக். பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த பும்ரா-பாண்டியா! சூப்பர் 8-க்கு கெத்தாக நுழைந்தது இந்தியா!"
Recommended image2
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image3
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Related Stories
Recommended image1
இது நம்ப லிஸ்டுலையே இல்லையே.! மீண்டும் மன்மதனாக மாறும் சிம்பு? இரண்டாம் பாகத்திற்கு பக்கா பிளான் போட்ட STR!
Recommended image2
விராட் கோலி குடிக்கும் தண்ணீரின் விலை இத்தனை ஆயிரமா? அப்படி என்ன ஸ்பெஷல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved