MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ராணுவத்துக்கு ஐபிஎல் அணிகள் பாராட்டு! சிஎஸ்கே சொன்னது தான் இதில் ஹைலைட்!

ராணுவத்துக்கு ஐபிஎல் அணிகள் பாராட்டு! சிஎஸ்கே சொன்னது தான் இதில் ஹைலைட்!

ஆர்சிபி, சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உள்ளிட்ட பல அணிகள் இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் வீரத்தையும் பாராட்டியுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : May 09 2025, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

IPL Teams Salute Indian Army: இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் வலுவடைந்து வரும் நிலையில், தாய் நாட்டை காக்க நமது ராணுவ  வீரர்கள் தீரத்துடன் போரிட்டு வருகின்றனர். இந்த போர் காரணமாக ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் பாதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு வாரத்த்துக்கு ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நமது இந்திய ராணுவத்தின் துணிச்சலையும் வீரத்தையும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணிகள் பாராட்டியுள்ளன.

24
இந்திய ராணுவத்துக்கு சிஎஸ்கே, ஆர்சிபி பாராட்டு

இந்திய ராணுவத்துக்கு சிஎஸ்கே, ஆர்சிபி பாராட்டு

RCB தங்கள் X தளத்தில், "இந்த தேசிய நெருக்கடியான நேரத்தில், நமது இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலையும் வீரத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம், மேலும் இந்தியாவில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்திக்கிறோம். ஜெய்ஹிந்த்" என்று பதிவிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எக்ஸ் தளத்தில், "ஒவ்வொரு அடியிலும் துணிச்சல். ஒவ்வொரு இதயத் துடிப்பிலும் பெருமை. நமது ஆயுதப்படைகளைப் பாராட்டுகிறோம். நாடு தான் முதலில் மற்றதெல்லாம் அதன் பிறகு தான்" என்று பதிவிட்டுள்ளது.

Related Articles

Related image1
PBKS vs DC: ஐபிஎல் போட்டி ரத்து; பாகிஸ்தான் ஒழிக என முழக்கமிட்ட ரசிகர்கள்!
Related image2
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் ரத்து! அதிரடி அறிவிப்பு! மற்ற போட்டிகள் எப்போது நடக்கும்?
34
ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து

ஐபிஎல் 2025 போட்டிகள் ரத்து

இதேபோல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ''நாடு தான் முதலில் முக்கியம். இந்திய ராணுவத்துக்கு சல்யூட். ஜெய்ஹிந்த்'' என்று தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ''எப்போதும் நாடு தான் பர்ஸ்ட். நேற்று, இன்று, நாளை என எப்போதும் நமது ராணுவத்துடன் துணை நிற்போம்''என்று கூறியுள்ளது. போர் பதற்றம் அதிகரித்ததால் ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஐபிஎல் நிர்வாகம் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகளை நடத்துவது குறித்து ஒரு வாரத்துக்கு பிறகு கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

44
பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி ரத்து

பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி ரத்து

ஐபிஎல் தொடரில் இதுவரை 58 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 12 லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் போட்டிகள், இறுதிப்போட்டி நடைபெற இருந்தது. ஐபிஎல் தொடரில் நேற்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டி நடந்து கொண்டிருந்தபோது பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களை தாக்கிய நிலையில், போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரசிகர்களும், வீரர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
சிஎஸ்கே
ஆபரேஷன் சிந்தூர்
இந்தியா-பாகிஸ்தான் போர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Recommended image2
IND vs PAK: ருத்ரதாண்டவமாடிய இஷான் கிஷன்.. யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து மாஸ்!
Recommended image3
10ஆம் வகுப்பு தேர்வு எழுதாத 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. பின்னணி காரணம் இதுதான்!
Related Stories
Recommended image1
PBKS vs DC: ஐபிஎல் போட்டி ரத்து; பாகிஸ்தான் ஒழிக என முழக்கமிட்ட ரசிகர்கள்!
Recommended image2
IPL 2025: ஐபிஎல் 2025 தொடர் ரத்து! அதிரடி அறிவிப்பு! மற்ற போட்டிகள் எப்போது நடக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved