MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • MS Dhoni: சத்தமில்லாமல் பெரும் சாதனை படைத்த 'தல' தோனி..! சிஎஸ்கே ரசிகர்கள் குஷி..!

MS Dhoni: சத்தமில்லாமல் பெரும் சாதனை படைத்த 'தல' தோனி..! சிஎஸ்கே ரசிகர்கள் குஷி..!

இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ட்ரோன் பைலட் உரிமம் பெற்றுள்ளார். தோனி மிக விரைவாக இதை கற்றுக் கொண்டதாக கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rayar r
Published : Oct 07 2025, 08:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி
Image Credit : Getty

கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி

கூல் கேப்டன் மகேந்திர சிங் தோனி, டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை முடித்துவிட்டதாக இன்று அறிவித்துள்ளார். பைக்குகள் மீதான தனது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்திய தோனி, தனது கிரீடத்தில் மற்றொரு மைல்கல்லைச் சேர்த்துள்ளார். அதாவது அவர் கருடா ஏரோஸ்பேஸிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ட்ரோன் பைலட் உரிமத்தைப் பெற்றுள்ளார்.

24
ட்ரோன் பைலட் தோனி
Image Credit : Getty

ட்ரோன் பைலட் தோனி

கடுமையான பயிற்சித் திட்டத்தை முடித்த பிறகு, தோனி இப்போது ட்ரோன்களை இயக்க சான்றளிக்கப்பட்டுள்ளார். "கருடா ஏரோஸ்பேஸ் உடன் எனது டிஜிசிஏ ட்ரோன் பைலட் சான்றிதழ் திட்டத்தை முடித்துவிட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தோனி ஃபேஸ்புக் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கருடா ஏரோஸ்பேஸ் பிராண்ட் அம்பாசிடர் தோனி

கருடா ஏரோஸ்பேஸ் ஒரு டிஜிசிஏ-அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி நிறுவனம் (RPTO) ஆகும். இந்த நிறுவனம் இதுவரையில் 2,500-க்கும் மேற்பட்ட ஆர்வமுள்ள பைலட்டுகளுக்கு பயிற்சி அளித்துள்ளது. 

தோனியின் சாதனை குறித்துப் பேசிய கருடா ஏரோஸ்பேஸின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அக்னீஷ்வர் ஜெயப்பிரகாஷ், தங்களது பிராண்ட் அம்பாசிடர் இந்தத் திட்டத்தை முடித்ததில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

Related Articles

Related image1
MS Dhoni: மீண்டும் இந்திய அணிக்கு வரும் தோனி?.. உங்கள விட்டா வேறு ஆள் இல்ல.. பிசிசிஐ வேண்டுகோள்!
Related image2
Wisden 21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி: சச்சின், கோலி, இல்லை! தோனி இருக்கிறாரா?
34
தோனி ஒரு உத்வேகம்
Image Credit : Getty

தோனி ஒரு உத்வேகம்

"எங்கள் பிராண்ட் அம்பாசிடரும் முதலீட்டாளருமான எம்.எஸ். தோனி, தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு பைலட்டாக சான்றிதழ் பெற்றது எங்களுக்கு ஒரு மகத்தான மைல்கல். அவர் மிக விரைவாக அதைக் கற்றுக்கொண்டார். கற்றுக்கொள்வதில் மிகவும் கவனம் செலுத்தினார்" என்று ஜெயப்பிரகாஷ் கூறினார்.

 "ட்ரோன் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் எங்கள் நோக்கத்தில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. எங்கள் முழு அணிக்கும் ஒரு பெரிய ஊக்கமளிக்கிறது. தோனி பாய் ஒரு உத்வேகம்'' என்றும் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

44
கிரிக்கெட்டின் சாதனை மன்னன்
Image Credit : Getty

கிரிக்கெட்டின் சாதனை மன்னன்

பைக்குகள் மீது தனியாத காதல் கொண்ட தோனி, 2011ல் இந்திய பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் என்ற கௌரவப் பதவியையும் பெற்றுள்ளார். இந்திய அணிக்கு 50 ஓவர் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த ஒரே கேப்டனான தோனி, இந்தியாவுக்காக ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். சிஎஸ்கேவுக்கு 5 கோப்பைகளை வென்று கொடுத்த தோனி, தன்னுடைய 44 வயதிலும் கிரிக்கெட் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
எம். எஸ். தோனி
எம். எஸ். தோனி சி.எஸ்.கே
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அபிஷேக் சர்மாவின் பலவீனம்.. 'ஸ்கெட்ச்' போட்டு தூக்கும் எதிரணிகள்.. டக் அவுட்டில் மோசமான சாதனை!
Recommended image2
IND vs PAK: பிட்ச் எப்படி இருந்தால் எனக்கென்ன.. அதிரடி பேட்டிங் சீக்ரெட்டை சொன்ன இஷான் கிஷன்!
Recommended image3
IND vs PAK: பேசாம நீங்க ஊர்லயே இருந்திருக்கலாம்.. பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா.. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி!
Related Stories
Recommended image1
MS Dhoni: மீண்டும் இந்திய அணிக்கு வரும் தோனி?.. உங்கள விட்டா வேறு ஆள் இல்ல.. பிசிசிஐ வேண்டுகோள்!
Recommended image2
Wisden 21ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் அணி: சச்சின், கோலி, இல்லை! தோனி இருக்கிறாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved