MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Kula Deivam : குல தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வர மறுக்கிறதா? தெய்வம் வாசலிலேயே நிற்கிறதா? குலதெய்வ கட்டு உடைப்பது எப்படி.! இதோ தீர்வு.!

Kula Deivam : குல தெய்வம் உங்கள் வீட்டிற்குள் வர மறுக்கிறதா? தெய்வம் வாசலிலேயே நிற்கிறதா? குலதெய்வ கட்டு உடைப்பது எப்படி.! இதோ தீர்வு.!

Kula Deivam Veetuku Vara Vaipathu Eppadi : நம் வீட்டில் குலதெய்வம் நிரந்தரமாக வாசம் செய்ய வேண்டுமென்றால் குலதெய்வ கோவிலில் இருந்து ஐந்து பொருட்களை மறக்காமல் எடுத்து வர வேண்டும். அந்த பொருட்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

3 Min read
Author : Ramprasath S
Published : Apr 21 2026, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kula Deivam Veetuku Vara Vaipathu Eppadi
Image Credit : Asianet News

Kula Deivam Veetuku Vara Vaipathu Eppadi

குலதெய்வம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆணிவேர் போன்றது. நாம் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும், நாம் பரம்பரை பரம்பரையாக வணங்கி வந்த குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே குடும்பம் செழிக்கும். பல காரணங்களால் குலதெய்வம் நம் வீட்டை விட்டு விலகி இருக்க வாய்ப்புண்டு. குலதெய்வம் நம் வீட்டில் நிரந்தரமாக குடியிருந்து நம்மை காக்க வேண்டும் என்றால் குலதெய்வத்தின் கோவிலில் இருந்து ஐந்து முக்கிய பொருட்களை எடுத்து வர வேண்டும். அந்தப் பொருட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

27
குலதெய்வ கோயிலின் மண்
Image Credit : stockPhoto

குலதெய்வ கோயிலின் மண்

குலதெய்வம் கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் பொழுது அங்கிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம், குங்குமம் வைத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். குலதெய்வ கோவிலின் மண்ணுக்கு சக்தி மிக அதிகம். இந்த மண்ணை நிலை வாசலில் கட்டி வைக்கும் பொழுது துஷ்ட சக்திகள் நம் வீட்டை அண்டாது. வீட்டில் இருக்கும் தீய சக்திகளும் வெளியேறும். அடுத்த முறை குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்கு முன்னர் பழைய மண்ணை ஆற்றில் கரைத்து விட்டு, புதிய மண்ணை எடுத்து வர வேண்டும். ஆனால் குல தெய்வத்தின் மண் வைத்திருக்கும் சமயம் மிக சுத்தமாக இருக்க வேண்டும். நாள் தவறாமல் பூஜைகள் செய்ய வேண்டும். மீறினால் கஷ்டம் ஏற்படும்.

Related Articles

Related image1
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!
Related image2
கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!
37
சுவாமி பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம்
Image Credit : stockPhoto

சுவாமி பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம்

குலதெய்வ கோயிலின் மண்ணை பாதுகாப்பாக வைத்து தினசரி பூஜை செய்ய முடியாதவர்கள் எலுமிச்சம் பழத்தை வாங்கி வரலாம். குலதெய்வத்தின் மடியிலிருந்து அல்லது பாதத்தில் வைத்து வழிபட்ட எலுமிச்சம் பழத்தை அதேபோல் சிகப்பு அல்லது மஞ்சள் துணியில் கட்டி சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். இந்த முடிச்சை பூஜை அறை, வேலை பார்க்கும் இடம், நிலைக்கதவுகள் ஆகியவற்றில் கட்டி வைக்கலாம். மாணவர்கள் படிக்கும் இடங்கள், மேசைகள், தொழில் செய்யும் இடங்கள் ஆகியவற்றிலும் வைக்கலாம். இவ்வாறு செய்வதால் தொழில் சிறக்கும். வீட்டில் அமைதி நிலவும். பிரச்சனைகள் தீரும். கண் திருஷ்டிகள் விலகும். செல்வம் பெருகும்.

47
திருநீறு அல்லது சாம்பல் பிரசாதம்
Image Credit : Asianet News

திருநீறு அல்லது சாம்பல் பிரசாதம்

குலதெய்வ கோவிலில் வழங்கப்படும் திருநீறு, சாம்பல், மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றிற்கும் சக்தி அதிகம். இதை அலட்சியமாக கருதக்கூடாது. குலதெய்வ கோவில் திருவிழாக்களின் போது நடைபெறும் தீமிதி நிகழ்வுகளில் கிடைக்கும் சாம்பலை எடுத்து வரலாம். இதை பூஜை அறையில் திருநீறுடன் கலந்து வைத்துக்கொண்டு தினமும் நெற்றியில் பூசி வரலாம். இதன் காரணமாக கண் திருஷ்டிகள் விலகும். எதிரிகளின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியும். எதிரிகள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். சாம்பல் கிடைக்காதவர்கள் குலதெய்வ கோயிலில் வழங்கப்படும் திருநீறு பிரசாதத்தை வீட்டில் உள்ள திருநீறுடன் கலந்து பயன்படுத்தலாம்.

57
அபிஷேக சந்தனம்
Image Credit : Asianet News

அபிஷேக சந்தனம்

குலதெய்வ கோயிலில் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படும் சந்தனத்தை எடுத்து வந்து வீட்டில் பயன்படுத்தலாம். செவ்வாய், வெள்ளி அல்லது சுப தினங்களில் இந்த சந்தனத்தை சிறிது ஜவ்வாது பொடியுடன் கலந்து கரைத்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். இந்த சந்தனத்தை கைநிறைய எடுத்து நிலை வாசல், பூஜையறை ஆகிய இடங்களிலும் தடவி குங்குமம், வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்து வழிபடுவது வீட்டில் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் ஈர்க்கும். லட்சுமி கடாட்சத்தை வரவழைக்கும். குலதெய்வம் நிரந்தரமாக நம் வீட்டில் தங்கும்.

67
மஞ்சள் கயிறு அல்லது தாலி சரடு
Image Credit : stockPhoto

மஞ்சள் கயிறு அல்லது தாலி சரடு

குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறை வாங்கி வந்து அதை சுவாமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தாலி சரடு மாற்றும்பொழுது இந்த கயிறை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு செய்வது பெண்களுக்கு சுப பலன்களை தரும். குடும்பத்தில் உள்ள ஆண்களின் ஆயுள் கெட்டியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும், கணவருக்கு நீண்ட ஆயுளும் கிடைக்கும்.

77
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆன்மீகம்
கோவில்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Adi shankara Jayanti ஸ்ரீ சங்கர ஜெயந்தி... ஆதி சங்கரர் பற்றி பலரும் அறியாத 5 'அதிசய' ரகசியங்கள்
Recommended image2
valarpirai Panchami வளர்பிறை பஞ்சமியில் வராஹியை இப்படி வழிபடுங்க...வாழ்க்கையே மாறும்
Recommended image3
மஹாலக்ஷ்மி தாயாருடன் சனி அமர்ந்து அருள் பாலிக்கும் அதிசய தலம்.! இங்கு வழிபட்டால் சனி தோஷம் நீங்கும், சனியின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.!
Related Stories
Recommended image1
குழந்தைகளுக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்? எந்த வயதில் பலன்கள் பார்க்க வேண்டும்? தேசமங்கையர்கரசி விளக்கம்.!
Recommended image2
கணவரை இழந்த பெண்கள் பூச்சூடுவது சரியா? தவறா? போட்டுடைத்த தேசமங்கையர்கரசி.! பெண்களுக்கான முக்கிய தகவல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved