MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: எமகண்டத்துல இதையெல்லாம் செஞ்சு பாருங்க.! அத்தனையும் சக்சஸ் ஆகும் தெரியுமா?!

Spiritual: எமகண்டத்துல இதையெல்லாம் செஞ்சு பாருங்க.! அத்தனையும் சக்சஸ் ஆகும் தெரியுமா?!

எமகண்டம் என்பது பயப்பட வேண்டிய நேரமல்ல, மாறாக அதை சரியாகப் பயன்படுத்தினால் அதிர்ஷ்டத்தை தரும் சக்திவாய்ந்த நேரமாகும். இந்த நேரத்தில் பழைய திட்டங்கள், தியானம், அபய தானம் போன்ற செயல்களில் ஈடுபட்டால், குடும்ப மற்றும் பணப் பிரச்சினைகள் தீர்க்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 27 2025, 02:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எமகண்டம் என்ற சக்திவாய்ந்த நேரம்
Image Credit : Asianet News

எமகண்டம் என்ற சக்திவாய்ந்த நேரம்

இந்து சாஸ்திரங்களில், நம்ம வாழ்க்கையில் வரும் தடை, கட்டுப்பாடுகள் எல்லாம் சில சமயம் நம்ம கைகளாலேயே தீர்க்கலாம் என்று ஒரு ரகசியம் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக “எமகண்டம்” என்று ஒரு சக்திவாய்ந்த நேரம் நம்ம வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை தரக்கூடியது. எமகண்டம் என்றால் சிலருக்கு பயந்துவிடும் நேரம் என்று தோன்றலாம். ஆனால் அந்த நேரத்தை நாம் தவிர்க்க வேண்டிய நேரமாக அல்ல, சரியான வழியில் பயன்படுத்தினால் நம்ம வாழ்க்கையை செஞ்சிடும் அதிர்ஷ்ட நேரமாக மாற்ற முடியும் என்று பல ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.

25
 மிக உயர்ந்த பலனை தரும் எமகண்டம்
Image Credit : Asianet News

மிக உயர்ந்த பலனை தரும் எமகண்டம்

எமகண்ட நேரத்தில் நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. முதலில், எந்த ஒரு புதிய காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டாம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அதே நேரத்தில் பழைய காரியங்கள், நம்மால் தொடங்கியுள்ள திட்டங்கள், மனதில் வைத்திருக்கும் கனவுகளை நிறைவேற்றப் பயன்படும் தியானம், பிரார்த்தனை மற்றும் சாதனைகளை இந்த நேரத்தில் செய்தால் மிக உயர்ந்த பலனை தரும். இது நம்ம மனதையும் ஆற்றலையும் சரியான பாதையில் செலுத்தும் நேரம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அந்த நேரத்தில் நம்முடைய மனதில் வரும் எதிர்மறை சிந்தனைகளை விலக்கி, ஒளி, எளிமை, அமைதி போன்ற சிந்தனைகளில் ஈடுபட்டால் நம்ம ஆற்றல் மண்டலம் சுத்தமாகிறது. இந்த நேரத்தில் தீபம் ஏற்றி, தெய்வ நாம ஜபம் செய்தால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள், தடை, சண்டைகள், பணப் பிரச்சினைகள் எல்லாம் மெதுவாக மறையும். குறிப்பாக பிரம்மா முறைப்படி வீட்டைச் சுத்தப்படுத்துவது, நீர் ஊற்றி பூஜை அறையில் துளசி வைத்து தியானம் செய்வது, அஷ்டலட்சுமி அல்லது சுப்ரமணியர் ஸ்லோகம் சொல்லுவது மிக நல்லது.

Related Articles

Related image1
Spiritual: இந்த ஒரு பரிகாரம் போதும்.! இனி கடன் பிரச்சினை காணாமல் போகும்.!
Related image2
Spiritual: விளக்கு வழிபாட்டின் தெய்வீக ரகசியங்கள்! தினமும் திரியை மாற்றினால் இவ்ளோ சிறப்பா?!
35
எமகண்டத்தில் செய்யும் ஒரு முக்கிய ஆன்மிக செயல்
Image Credit : Asianet News

எமகண்டத்தில் செய்யும் ஒரு முக்கிய ஆன்மிக செயல்

எமகண்டத்தில் செய்யும் ஒரு முக்கிய ஆன்மிக செயல்— “அபய தானம்”. அதாவது யாரோ ஒருவருக்கு உதவி செய்தாலே அந்த உதவி நம்மையும் காக்கும். இந்த நேரத்தில் குடும்பத்துக்கு உதவி செய்வது, ஒரு சிறு நன்மை செயல் செய்யும் எண்ணமே நம்ம வாழ்க்கையை மாற்றும் விதமான செழிப்பு சக்தியை ஈர்க்கும்.

45
பயப்படுவது அல்ல, புரிந்து கொண்டு சீராக பயன்படுத்துவது
Image Credit : Asianet News

பயப்படுவது அல்ல, புரிந்து கொண்டு சீராக பயன்படுத்துவது

எமகண்டத்துல முக்கியமானது— பயப்படுவது அல்ல, புரிந்து கொண்டு சீராக பயன்படுத்துவது. நம்ம மனசுக்கு நம்பிக்கை, நம்ம முயற்சிக்கு உழைப்பு, நம்ம வாழ்வுக்கு தெய்வ ஆசீர்வாதம் சேரும்போது எந்த ஒரு காரியமும் தோல்வியடையாது. அதனால்தான் சாஸ்திரங்களில் சொல்லப்படுகிறது: “எமகண்டத்தை மாற்ற முடியாது, ஆனால் அதில் நம்ம விதியை மாற்ற முடியும்.”

55
எப்போதும் வெற்றி தரும்
Image Credit : Asianet News

எப்போதும் வெற்றி தரும்

ஒரு முறை இதைச் செய்து பாருங்க. நம்பிக்கையோடு செய்கிற நன்மை எப்போதும் வெற்றி தரும். உங்கள் வாழ்க்கையில் வெற்றி, அமைதி, செழிப்பு வந்து சேரட்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோவிலில் செருப்பு காணாமல் போனால் அதிர்ஷ்டமா? ஜோதிடர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
மகா சிவராத்திரி உருவான வரலாறு: ஏன் இந்த இரவு இவ்வளவு புனிதமானது? முழு விபரம்!
Recommended image3
தனுசு ராசியினர் வழிபட வேண்டிய சிவன் கோயில் எங்கு இருக்கிறது? என்ன பலன் கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Spiritual: இந்த ஒரு பரிகாரம் போதும்.! இனி கடன் பிரச்சினை காணாமல் போகும்.!
Recommended image2
Spiritual: விளக்கு வழிபாட்டின் தெய்வீக ரகசியங்கள்! தினமும் திரியை மாற்றினால் இவ்ளோ சிறப்பா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved