MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமா..? செந்தில் பாலாஜியை சில்லு சில்லாய் சிதைக்க வரும் விஜய்..! திமுக கோட்டைக்குள் ‘சனி’ அட்டாக்..!

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமா..? செந்தில் பாலாஜியை சில்லு சில்லாய் சிதைக்க வரும் விஜய்..! திமுக கோட்டைக்குள் ‘சனி’ அட்டாக்..!

செந்தில் பாலாஜிக்கு எதிரான பல தகவல்களையும் விஜய் சேகரித்து வருவதாகவும், கரூர் பயணத்தின் போது மாபெரும் அட்டாக் இருக்கும் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள். 

2 Min read
Author : Thiraviya raj
Published : Sep 22 2025, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய் பயணத்தில் திடீர் மாற்றம்
Image Credit : Asianet News

விஜய் பயணத்தில் திடீர் மாற்றம்

விஜயின் சுற்றுப்பயணம் தமிழக அரசியலில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தவெக மீதான மக்கள் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் மாபெரும் பயணம் பெரும் எழுச்சையாக மாறிஉ வருகிறது. "உங்கள் விஜய் நான் வரேன்..! வாகை சூடும் வரலாறு திரும்புகிறது" என்ற முழக்கத்துடன் தொடங்கிய இந்தச் சுற்றுப்பயணம், வெற்றிகரமாக அமைந்து, பிற கட்சிகளிடையே பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக திமுகவை திகிலடைய வைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

விஜய் தனது அடுத்த அரசியல் சுற்றுப்பயண திட்டத்தை திடீரென மாற்றியுள்ளார். சமீபதில் திமுகவின் ‘முப்பெரும் விழா’ நடைபெற்ற அதே கரூருக்கு, வரும் சனிக்கிழமை விஜய் சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளார். விஜய்யின் அடுத்த சுற்றுப்பயணம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வடசென்னை, திருவள்ளூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தத் திட்டம் மாற்றப்பட்டு, சேலம், நாமக்கல்லில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது சேலத்திற்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

24
திமுக முப்பெரும் விழா பிரம்மாண்டம்
Image Credit : x/DMK

திமுக முப்பெரும் விழா பிரம்மாண்டம்

காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசும் விஜய், அன்று மாலை 3 மணியளவில் கரூரில் பேசுவார் என்று கூறப்படுகிறது. விஜயின் இந்த திடீர் மாற்றம், மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கி உள்ளது. காரணம், செந்தில் பாலாஜி.

சமீபத்தில், திமுக முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 17 ம் தேதி கரூர் மாவட்டம், கோடங்கிபட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 3 லட்சத்திற்கும் மேலான தொண்டர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 25,000 பெண்களுக்கு சுடிதார்/சேலை, 25,000 ஆண்களுக்கு வேட்டி-சட்டை, 25,000 இளைஞர்களுக்கு இளைஞரணி சீருடை என 1 லட்சம் பேர் சீருடையில் கலந்து கொண்டனர்.

Related Articles

Related image1
செந்தில் பாலாஜியை பார்த்து செம காண்டான திருச்சி சிவா..! திமுக தொண்டர்களை பார்த்து ஆவேசம்
34
எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்
Image Credit : ANI

எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்

கரூர் மாவட்ட திமுக செயலாளர், கரூர் சட்டமன்ற உறுப்பினரான செந்தில் பாலாஜி இந்த விழாவை திமுக வரலாற்றிலேயே இல்லாத அளவு பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக மாற்றினார்."கோடு போட சொன்னால் ரோடு போட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி. பொதுக்கூட்டத்தை மாநாடாக மாற்றி விட்டார். மேற்கு மண்டலத்தின் எதிரிகளுக்கு சிம்ம சொப்பானம்" என செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

44
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏக சம்பவங்கள்
Image Credit : Asianet News

செந்தில் பாலாஜிக்கு எதிராக ஏக சம்பவங்கள்

இந்த நிலையில், திமுகவின் முப்பெரும் விழா நடைபெற்ற , செந்தில் பாலாஜியின் கோட்டையாக கருதப்படும் அதே கரூருக்கு விஜய் செல்வது நேரடிச் சவாலாக பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விஜய்யின் வருகை, கரூர் மாவட்ட தி.மு.க.வினரை கலக்கமடைய செய்துள்ளது. போகும் இடங்களில் எல்லாம் அந்தப்பகுதியினரின் திமுக உள்ளூர் தலைவர்களையும் கடுமையாக தாக்கி வருகிறார் விஜய். செந்தில் பாலாஜியை விமர்சிக்க ஏக சம்பவங்கள் இருக்கிறது. விட்டு வைத்து விடுவாரா விஜய்..? அங்கு விஜய் என்ன பேசுவார்? செந்தில் பாலாஜியை எப்படி அட்டாக் செய்வார்? என இப்போதே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான பல தகவல்களையும் விஜய் சேகரித்து வருவதாகவும், கரூர் பயணத்தின் போது மாபெரும் அட்டாக் இருக்கும் என்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)
செந்தில் பாலாஜி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக.?! சிவராத்திரி பூஜையில் முடிந்தது பேச்சுவார்த்தை.! அண்ணியாருக்கு துணை முதலமைச்சர் பதவியாம்!
Recommended image2
வாய்தவறி வந்த வார்த்தை... த்ரிஷாவிற்காக நயினார் வருத்தம்... அண்ணாமலை விட்ட டோஸ்..!
Recommended image3
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
Related Stories
Recommended image1
செந்தில் பாலாஜியை பார்த்து செம காண்டான திருச்சி சிவா..! திமுக தொண்டர்களை பார்த்து ஆவேசம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved