கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!
சென்னையில் சிபிஐ அலுவலகம் உள்ள நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் தவெக இணைய மறுப்பதால்தான் இத்தகைய நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டிருக்கிறது” என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட நான்கு பேர் டிசம்பர் 29-ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராக சமன் அனுப்பப்பட்டு இருக்கிறது. கரூர் வழக்கு விசாரணை தீவிர படுத்தப்பட்டு வருகிறது. தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணை நடத்தினர். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஈரோடு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் ஏற்கெனவே சுமார் 10 மணி நேரம் விசாரி நடத்தப்பட்டது.
இருப்பினும் விசாரணை முழுமை அடையவில்லை எனக்கூறப்படுகிறது. மீண்டும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஈரோடு மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோர் மீண்டுமே விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ அறிவுறுத்தி இருக்கிறது. டிசம்பர் 29 அன்று டெல்லியில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் கூடுதல் விசாரணை நடக்கவுள்ளது. டெல்லி இந்த விவகாரத்தை தீவிரமாக கையாள்வது விஜய் தரப்ப அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது. முக்கிய நிர்வாகிகளை டெல்லிக்கு சிபிஐ அழைத்துள்ளது விஜய் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டெல்லி இந்த விவகாரத்தில் இவ்வளவு கடுமை காட்டும் என விஜய் நினைக்கவே இல்லை என்கிறார்கள்.
சில பெரிய அரசியல் வழக்குகள், நாட்டை உலுக்கிய வழக்குகளில் காட்டிய அதே கடுமையான போக்கை இந்த வழக்கிலும் தவெக மீது காட்டுவதாக அரசியல் வட்டாரத்தினர் கூறுகின்றனர். எதிர்பார்க்காத வண்ணம் இந்த முறை சிபிஐ மிக சீரியஸாக இந்த வழக்கை கடைபிடித்து வருவது பரபரப்பை கிளப்பி உள்ளது.இதனையடுத்து விஜய் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், முறைப்படியான சம்மன் அனுப்பாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமா? மூத்த வழக்கறிஞர்களின் கருத்துகளை கேட்டு முடிவெடுக்கலாமா? என விவாதிக்கப்பட்டது. இதன் பின்னர், டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலக விசாரணைக்கு வரும் 29-ந் தேதி நேரில் சென்று ஆஜராவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
“சென்னையில் சிபிஐ அலுவலகம் உள்ள நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்படுவதன் பின்னணியில் அரசியல் இருக்கிறது. அதிமுக -பாஜக கூட்டணியில் தவெக இணைய மறுப்பதால்தான் இத்தகைய நடவடிக்கையை சிபிஐ மேற்கொண்டிருக்கிறது” என்கின்றனர் தவெக நிர்வாகிகள்.
முன்பு நடைபெற்ற விசாரணையில் தவெக நிர்வாகிகளிடம் கரூர் கூட்டத்தில் பங்கேற்க தொண்டர்கள் எந்தெந்த மாவட்டங்களில் இருந்து வந்தார்கள்? சென்னையிலிருந்து நாமக்கல் வழியாக கரூர் வந்த விஜயின் பயணத் திட்டத்தை வகுத்தது யார்? செப்டம்பர் 27 அன்று மதியம் மூன்று மணிக்கு கூட்டம் நடக்க திட்டமிட்டு இருந்ததும் நண்பர்கள் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்க சொன்னது யார்? விஜய் பேசிக்கொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் வந்த போது சரியான தகவல் அவரிடம் தெரிவிக்கப்படவில்லையா?
கூட்டத்தில் மயக்கம் அடைந்தவர்கள் மீது தண்ணீர் பாட்டில்களை வீசப்பட்ட பிறகும் விஜய் ஏன் தனது பேச்சை தொடர்ந்தார்? கரூர் கூட்டத்தை கருதி வேறு இடத்தில் கூட்டம் நடத்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்களா? காவல்துறை அறிவுறுத்தல்களை மீறி கூட்ட நெரிசலுக்கு பேருந்தை நகர்த்த உத்தரவிட்டது யார்? நண்பகல் 12:00 மணிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்ட விஜய் இரவு 7 மணிக்கு வரக் காரணம் என்ன? தொண்டர்களின் வருகையும், மற்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைக்கும் பொறுப்பிலிருந்த நிர்வாகிகள் யார்? கூட்டத்தை பெரியதாக காட்ட வேண்டும் என்பதற்காக இந்த தாமதம் திட்டமிட்டதா? என கேள்விகள் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
