MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ஷாக் கொடுத்த சர்வே முடிவுகள்..! அமைச்சர்கள், மா.செ, எம்.எல்.ஏ-க்கள் மீது சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்..!

ஷாக் கொடுத்த சர்வே முடிவுகள்..! அமைச்சர்கள், மா.செ, எம்.எல்.ஏ-க்கள் மீது சாட்டையைச் சுழற்றும் ஸ்டாலின்..!

கட்சியின் கோஷ்டி பூசலை தீர்க்கும் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியாதவர்கள், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அந்தப்பிரச்னைகளை தீர்த்து வைப்பர். அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால்..

2 Min read
Author : Thiraviya raj
Published : Oct 21 2025, 05:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத்தேர்தல் பணிகள் வேகமெடுத்து வருகின்றன. திமுக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின் மூலம் அறிவாலயத்தில் சட்டசபை தொகுதி நிர்வாகிகளை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இதுவரை 150க்கும் மேற்பட்ட சட்டசபை தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளைச் சந்தித்து பேசியுள்ளார். இந்நிலையில், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளாதாகக் கூறப்படுகிறது.

24
Image Credit : Google

இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தினர் கூறும்போது, ‘‘கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு நிறைய மக்கள் நலத் திட்டங்களை தீட்டி, அதை முறையாக நிறைவேற்றி இருக்கிறது. சொல்லப்போனால் ஆட்சி வாயிலாக நிறைய சாதனைகள் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவற்றையெல்லாம் கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், எம்எல்ஏக்களும், தொகுதி பொறுப்பாளர்களும் முறையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. இதனால் திமுக மீதான ஈர்ப்பு பொதுமக்களுக்கு குறைந்துவிட்டதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் மூலம் திமுக தலைமை கண்டறிந்துள்ளது.

அதேபோல கட்சித் தொண்டர்களையும் பொதுமக்களையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அரவணைத்து செல்ல வில்லை என்ற குற்றச்சாட்டு தமிழகம் முழுதும் உள்ளது. திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது? மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர்? என்பதையெல்லாம் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் கேட்டறியாமல் உள்ளனர். இதையெல்லாம் விரைந்து சரி செய்ய வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.

Related Articles

Related image1
நான் சாதியால் நசுக்கப்பட்டவன்..! அதை கடைசிவரை எதிர்ப்பேன்..! அத்துமீறும் மாரி செல்வராஜ்
34
Image Credit : ANI

அதனால், அமைச்சர்கள், மாவாட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் தேர்தல் முடியும் வரை வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது எனஉத்தரவிட்டுள்ளார். துறை சார்ந்து வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு மட்டும் அமைச்சர்கள் வேண்டுமானால், கட்சி தலைமையின் உரிய அனுமதி பெற்று செல்லலாம். ஆனால் மற்றவர்கள், தொடர்ந்து தொகுதி மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் குறைகளை கேட்டு களைய வேண்டும். அரசு நிறைவேற்றிய திட்டப் பலன்களை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். கட்சிக்குள் மாவட்டம் தோறும் இருக்கும் கோஷ்டி பூசல்கலையும் உடனடியாக தீர்க்க வேண்டும் எனவும் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

44
Image Credit : Asianet News

கட்சியின் கோஷ்டி பூசலை தீர்க்கும் விவகாரத்தில், பொறுப்பு அமைச்சர்களால் தீர்வு காண முடியாதவர்கள், மண்டல பொறுப்பாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அவர்கள் அந்தப்பிரச்னைகளை தீர்த்து வைப்பர். அவர்களாலும் முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டால் தான், தலைமை நிலைய நிர்வாகிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். கட்சி பிரச்னைகள் அனைத்தும், இம்மாதம் இறுதிக்குள் தீர்வு காண வேண்டும்.

பொதுமக்கள் தெரிவிக்கும் அனைத்து கோரிக்கைகளையும் உரிய அதிகாரிகள், கலெக்டர் கவனத்துக்குக் கொண்டு சென்று, ஒவ்வொன்றையும் தீர்க்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே வரும் சட்டசபை தேர்தலில், திமுக எதிர்பார்த்த வெற்றியை பெறும் என முதல்வர் கூறியுள்ளார்’’ என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தினர்.

About the Author

TR
Thiraviya raj
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அதிமுக கூட்டணியில் மீண்டும் தேமுதிக.?! சிவராத்திரி பூஜையில் முடிந்தது பேச்சுவார்த்தை.! அண்ணியாருக்கு துணை முதலமைச்சர் பதவியாம்!
Recommended image2
வாய்தவறி வந்த வார்த்தை... த்ரிஷாவிற்காக நயினார் வருத்தம்... அண்ணாமலை விட்ட டோஸ்..!
Recommended image3
வங்கதேசத்தின் புதிய அமைச்சரவையில் இந்து அமைச்சர்..! யார் இந்த கயேஷ்வர் சந்திர ராய்..?
Related Stories
Recommended image1
நான் சாதியால் நசுக்கப்பட்டவன்..! அதை கடைசிவரை எதிர்ப்பேன்..! அத்துமீறும் மாரி செல்வராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved