- Home
- Politics
- உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!
உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்காகத்தான்.. மேடையிலேயே கண் கலங்கிய செங்கோட்டையன்..!
வழி தெரியாமல் இருக்கிற போது வழிகாட்டினார். புரட்சித்தலைவி அம்மாவுடன் பயணத்தை மேற்கொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டியவர்தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டிச் சென்று விட்டார்.

‘‘வழி தெரியாமல் தவித்த எனக்கு வழிகாட்டினார் விஜய்... ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான்’’ என மேடையில் கண் கலங்கினார் செங்கோட்டையன்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் பேசிய அவர், ‘‘வழிதெரியாமல் தவித்த போது எனக்கு வழிகாட்டினார். (கண்ணீர் கலங்குகிறது. நா தழுதழுக்க..) நான் இன்றைக்குச் சொல்கிறேன்.என் உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும் அவருக்காகத்தான். தட்டுங்கள் திறக்கப்படும். சொல்லுங்கள் கேட்கப்படும் என ஏசுபிரான் சொன்னார்.இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லை என்று சொல்வதாகச் சொன்னார்கள்.
இந்து மதம் கேட்பதை கொடுப்பவரே கிருஷ்ணா கிருஷ்ணா.. என்று சொல்லும். கேட்காமலே தோன்றி இருப்பவர்தான் தளபதி விஜய் என இந்த நேரத்திலே சொல்லிக்கொள்கிறேன். ஏனென்றால் கேட்டால் கொடுப்பவர்களுக்கு மத்தியில் கேட்காமலே கொடுக்கும் தளபதி நமக்கு கிடைத்திருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்திருக்கிறார்.
வழி தெரியாமல் இருக்கிற போது வழிகாட்டினார். புரட்சித்தலைவி அம்மாவுடன் பயணத்தை மேற்கொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது. நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். நான் அடையாளம் காட்டியவர்தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டிச் சென்று விட்டார். அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை. நல்ல இடத்திற்கு நீங்கள் போங்கள் என அடையாளம் காட்டி இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன். அவரோடு இருந்தால் இன்னும் பின்னுக்குத் தள்ளி இருப்பார். விஜய் என்னை முன்னுக்குத்தள்ளி வந்து நிறுத்தி இருக்கிறார். அதற்காக கோடான கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனப் பேசினார்.
