- Home
- Politics
- மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
மனமிறங்கி வந்த இபிஎஸ்..! தாழியை உடைத்த ஓ.பி.எஸ்... அதிமுக -பாஜக கூட்டணியில் ஆடுபுலி ஆட்டம்..!
அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவதாக சம்மதித்திருக்கும் பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கு 3 சீட் மட்டுமே ஒதுக்குவதாக முடிவெடுத்திருக்கிறார். இந்த தகவலைக் கேட்டு சீற்றம் அடைந்திருக்கிறது ஓபிஎஸ் அணி.

அதிமுக-பஜக தொகுதி பங்கீடு முதற்கட்ட பேச்சு வார்த்தை நிறைவடைந்துள்ள நிலையில், திடீர் திருப்பமாக டிடிவி.தினகரன், ஓ.பி.எஸ் ஆகியோரை என்.டி.ஏ கூட்டணியில் இணைத்துக்கொள்ள இபிஎஸ் சம்மதித்ததாக தகவல் வெளியாகி இருந்தது.
இத்தனை நாட்களாக பாஜகவிடம் இணைத்துக் கொள்ள முடியாது என மல்லுக்கட்டி வந்த எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக இறங்கி வந்த நிலையில், திடீர் திருப்பமாகரென எகிறியடிக்க தொடங்கி இருக்கிறார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களை உள்ள நிலையில் தொகுதி பங்கீடு செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் பிரதான கட்சிகளான அதிமுக- பாஜக முந்தியது அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் -காங்கிரஸ் உடன் கால நிலவரம் குறித்தான ஆலோசனையை மட்டுமே நடத்தி இருக்கக்கூடிய நிலையில் தொகுதி பங்கேட்டை உறுதி செய்யவில்லை. தமிழகம் வருகை தந்த தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் முதலில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலக த்தில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து எம்ஆர்கே நகரில் உள்ள ஹோட்டல் லீலா பேலஸில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் நடத்தினார். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியில் 20 தொகுதிகளில் மட்டும் போட்டியிட்ட பாஜக வரும் தேர்தலில் தொகுதி எண்ணிக்கையை இருமடங்கிற்கு மேல் உயர்த்தி ஐம்பதாக கேட்டதாக சொல்லப்படுகிறது. வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள தொகுதிகளை அடையாளம் கண்டுள்ள பாஜக மேலிடம் கூடுதலாக தொகுதிகளை ஒதுக்கப் பேரம் பேசியதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி அதிமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட ஓபிஎஸையும், டிடிவி. தினகரனையும் கூட்டணிக்குள் கொண்டுவர பியூஸ் கோயல் வலியுறுத்திய நிலையில் இருவரையும் இணைக்க இபிஎஸ் கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
பாமகவையும், தேமுதிகவையும், அதிமுக- பாஜக கூட்டணிக்குள் இழுக்க பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் வன்னியர்கள், முக்குலத்தோரின் வாக்குகளை அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இத்தனை நாட்களாக இணைப்புக்கு இடையூறாக இருந்த இபிஎஸ் சற்று மனமிறங்கி வந்திருந்தாலும், ஓ.பி.எஸ கட்சியில் சேர்ப்பதற்கு ஒருபோதும் சம்மதிக்க முடியாது. வேண்டும் என்றால் கூட்டணியில் மட்டும் சேர்த்துக் கொள்ளலாம். அதுவும் இரட்டை இலை சின்னம் தர முடியாது என்று கறாராக தெரிவித்துள்ளார். ஓபிஎஸ், டிடிவி தினகரன் தரப்பை பாஜக ஒருங்கிணைத்துக் கொள்ளட்டும் என பழனிசாமி தெரிவித்துள்ளார். அதேநேரம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் அதிமுக தலைமையை ஏற்க வேண்டும், முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அவர்கள் இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது என்றும் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், ஓபிஎஸ், டிடிவி தினகரனை கூட்டணியில் சேர்ப்பது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் வெளியிட வேண்டாம். ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு மெகா கூட்டணி அறிவிப்பை வெளியிடும் போது பார்த்துக் கொள்வோம். கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பேச்சுவார்த்தையிலும் அண்ணாமலை இடம் பெறக்கூடாது என பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
எப்படியும் அதிமுகவில் இணைந்துவிடலாம் என்று நினைத்திருந்த ஓபிஎஸ்சின் எண்ணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார் பழனிசாமி. அதனால் அடுத்து என்ன செய்வது? என்ற அவரது ஆதரவாளர்களின் கேள்விக்கு தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது பயணிக்கலாம் என்று சொல்லி வந்தார் ஓபிஎஸ். இப்போது அதிலும் பங்கம் வந்துவிட்டது. அமமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்குவதாக சம்மதித்திருக்கும் பழனிசாமி, ஓபிஎஸ் அணிக்கு 3 சீட் மட்டுமே ஒதுக்குவதாக முடிவெடுத்திருக்கிறார். இந்த தகவலைக் கேட்டு சீற்றம் அடைந்திருக்கிறது ஓபிஎஸ் அணி.
இந்த நிலையில்தான் அடுத்து என்ன செய்வது? என்று நேற்று சென்னையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார் ஓபிஎஸ். அதிமுக தொண்டர் உரிமை மீட்பு கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம்? என்று கருத்துக்கணிப்பு நடத்தி இருக்கிறார் ஓபிஎஸ். இதற்கு ஒரு படிவம் ஒன்றை நிர்வாகிகளிடம் கொடுத்திருக்கிறார் ஓபிஎஸ். அந்த படிவத்தில் திமுக, தவெக கட்சிகள் இருந்துள்ளன. இதில் 90 சதவிகிதம் பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் 80 பேரில் 72 பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
திமுக கூட்டணியில் செல்வதுதான் எதிர்காலத்திற்கு நல்லது என்றும் பல நிர்வாகிகள் வலியுறுத்தி இருக்கிறார்கள். தனது அணியில் இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேரின் விருப்பத்தினை நிறைவேற்ற முடிவெடுத்துள்ளார் ஓபிஎஸ். அதற்கான பேச்சுவார்த்தையை தொடங்குவதாகவும் கூறி இருக்கிறார். தவெகவில் கூட்டணி அமைக்க 38 சீட் வேண்டும் என்கிற நிபந்தனையை முன் வைத்திருக்கிறார் ஓபிஎஸ்.
அதிமுகவுடன் இனி ஒருங்கிணைப்பு கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இனி போகப்போவதில்லை என்ற முடிவெத்த பின்னர்தான் ‘‘எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்வதறே வெட்கமாக இருக்கிறது. எடப்பாடி இருக்கும் வரை நாம் அதிமுகவில் இணையப்போவதில்லை’’ என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கமும் கர்ஜித்துள்ளார்.
