- Home
- Politics
- TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Vijay Controversy: விஜய் இரண்டு இடங்களில் தேர்தலில் போட்டியிடும் நிலையில், ஒரே மாதிரி சொத்து விவரங்களை தாக்கல் செய்யாமல் 100 கோடி சொத்தை மறைத்ததாக தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜய்க்கு எதிராக வழக்கு
தவெக (தமிழக வெற்றி கழகம்) கட்சி தலைவராக உள்ள விஜய் தாக்கல் செய்த தேர்தல் வேட்புமனுக்களில் சொத்து விவரங்கள் முரண்பாடாக உள்ளது என்ற குற்றச்சாட்டின் பேரில் விக்னேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் அதிரடி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
ரூ.100 கோடி அளவிற்கு வேறுபாடு
இந்த மனுவில் கூறியதாவது, விஜய் இரண்டு வேறு தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களில் கணிசமான வேறுபாடு இருப்பதாகும். குறிப்பாக, பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் விஜய் தனது சொத்து மதிப்பை ரூ.115.13 கோடி என குறிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த மனுவில் ரூ.220.15 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த இரண்டு தகவல்களுக்கும் இடையில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு வேறுபாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சந்தேகத்தை ஏற்படுத்துகிறது
இந்த முரண்பாடு குறித்து கேள்வி எழுப்பிய மனுதாரர், இது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகவும், வாக்காளர்களை தவறாக வழிநடத்தும் செயலாகவும் இருக்கலாம் என வாதிட்டார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் சொத்து மற்றும் வருமான விவரங்களை தெளிவாகவும் ஒரே மாதிரியாகவும் வெளியிட வேண்டும் என்பது சட்டத்தின் அடிப்படை நிபந்தனையாகும். இந்த நிலையில், இவ்வளவு பெரிய அளவில் சொத்து மதிப்பில் வேறுபாடு இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை குறைத்து காட்டியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு கவனிக்கத்தக்கது என கருத்து தெரிவித்தது. இதனை தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வருமான வரித்துறைக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கி, விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெரினா பீச்சில் கடலுக்கு அருகில் செல்ல முடியாதா? காரணம் இதுதான்!
முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
குறிப்பாக, புதிய கட்சியை ஆரம்பித்து அரசியலில் தன்னுடைய இடத்தை உருவாக்க முயற்சி செய்து வரும் விஜய்க்கு இது ஒரு முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது. அவருடைய ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த விவகாரம் விரைவில் தெளிவாகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மேலும், தேர்தல் வேட்புமனுக்களில் தவறான தகவல்கள் வழங்கப்பட்டால், அது சட்ட ரீதியாக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். தேர்தல் ஆணைய விதிகளின்படி, வேட்பாளர் வழங்கும் சொத்து விவரங்கள் உண்மையல்ல என நிரூபிக்கப்பட்டால், அவருடைய வேட்பு நிராகரிக்கப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எதிரிபார்ப்பை அதிகரித்துள்ளது வழக்கின் தீர்ப்பு
மொத்தத்தில், விஜயின் சொத்து விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் கண்காணிப்பில் உள்ள முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது. வருமான வரித்துறையின் பதில் மற்றும் அதன் பின்னர் நீதிமன்றம் எடுக்கும் முடிவு இந்த வழக்கின் திசையை தீர்மானிக்கும். இதனால், அரசியல் மற்றும் ரசிகர் வட்டாரங்கள் இரண்டும் இந்த வழக்கின் அடுத்த கட்டத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
200-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக மாபெரும் வெற்றி பெறும் - அடிச்சு சொல்லும் கார்த்திக் மோகன்