- Home
- Politics
- திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
திமுகவும், ஃபெவிக்கால் ஃபிரண்ட்ஷிபும்..! கவர்ண்மென்ட் நடத்துறீங்களா? கண்காட்சி நடத்துறீங்களா..? பங்கம் செய்த விஜய்..!
ஈரோடு பகுதியில் இருக்கிற பிரச்சினை பற்றி பேசுவோம் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவரோட கொள்கைகளுக்கு எதிராக செயல்படுறாங்களோ? அப்படி தான் இந்த மஞ்சளுக்கும் ஒன்னும் பண்ணல.

பாஸ். எங்களுக்கு நிறைய வேலை இருக்குது...
கரூர் சம்பவத்துக்கு பின்னர், தமிழ்நாட்டில் விஜய் கலந்து கொள்ளும் பிரமாண்ட பொதுக்கூட்டமாக ஈரோடு பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், ‘‘ பாஸ்... நீங்க கேட்கிறீர்கள் என்பதற்காக எல்லாம் எதிர்த்துக்கிட்டு இருக்க முடியாது பாஸ். எங்களுக்கு நிறைய வேலை இருக்குது. எத்தனை எத்தனை பொய்யான வாக்குறுதிகள்? வந்த உடனே நீட்ட ரத்து செய்வோம், கல்வி கடனை ரத்து செய்வோம், கேஸ் சிலிண்டர் மானியம் நூறு ரூபாய் தருவோம்... என்னவெல்லாம் அடிச்சு விட்டுட்டு, இன்னிக்கி வரைக்கும் கேட்கிறேன். இதெல்லாம் சொன்னாங்களே செஞ்சாங்களா? எங்க செய்தாங்க? எப்பவுமே இப்படித்தான் சொல்றது ஒன்னு, செய்கிறது ஒன்று. திமுகவும் பிரச்சனைகளும் ஃபெவிக்கால் போட்டு ஓட்டு மாதிரி ஒன்றிலிருந்து உன்னை பிரிக்கவே முடியாது.
மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்று பண்ணல...
ஈரோடு பகுதியில் இருக்கிற பிரச்சினை பற்றி பேசுவோம் எனச் சொல்லிக் கொண்டு எப்படி அவரோட கொள்கைகளுக்கு எதிராக செயல்படுறாங்களோ? அப்படி தான் இந்த மஞ்சளுக்கும் ஒன்னும் பண்ணல. மஞ்சள் விவசாயிகளுக்கும் ஒன்று பண்ணல. ஆராய்ச்சி மையம் சிறப்பு மையம் என்று கோடி கோடியா டெண்டர் விட்டாங்க. பேருக்கு கட்டிடத்தை கட்டினாங்க. ஆனால் உலகமே போட்டி போட்டு வாங்குற மஞ்சளை மதிப்பு கூட்டி விற்பனை செய்யல. அதாவது அதோட வேல்யூ இன்க்ரீஸ் பண்ணி நம்ம விவசாயிகளுக்கும் இந்த மாவட்ட மக்களுக்கும் நன்மை செய்ய இதுவரைக்கும் என்ன செஞ்சுருக்காங்கன்னு யோசிச்சு பார்த்தா ஒண்ணும் இல்ல.
கரும்புக்கும், நெல்லுக்கு அரசாங்கம் விலை பிக்ஸ் பண்றாங்க. அதையும் ஒழுங்கா பண்றது இல்ல. ஒவ்வொரு முறையும் பிரச்சினை. அங்கு நெல் கொள்முதல் செய்றதுல ஊழல். சரி நாம கஷ்டப்பட்டு விளைய வைச்சது வீணா போக கூடாதுன்னு நினைச்சு நம்ம விவசாயிகள் கேட்கிற லஞ்சத்தை கொடுத்தாலும், அதுக்கப்புறம் கூட அந்த கொள்முதல் ஒழுங்கா நடக்கிறது இல்லை. அதையும் தாண்டி ஏதோ ஒரு விலை விவசாயிகளுக்கு கிடைக்கிறது. அப்படி எல்லாம் இல்லாமல், ஒழுங்காக, நேர்மையாக நம்ம மஞ்சளுக்கும் நியாயமான விலை ஃபிக்ஸ் பண்ணி தரமான விதைகளை கொடுத்தால் என்ன குறைஞ்சா போயிடுவாங்க? இதெல்லாம் யோசிக்கிறதுக்கு அவங்களுக்கு நேரமே இல்லை. 24 என்ன தெரியுமா ஊழல் தான் அவங்களோட சிந்தனையே.
மக்களே நீங்க புரிஞ்சுக்கணும்...
எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி நம்ம காளிங்கராயர் நதிகளின் இணைப்பை ஏற்படுத்தினார். பவானி ஆற்றில் அவர் அதிகமாக தண்ணீர் அணைகட்டி தேக்கி, தண்ணீர் வறட்சியான பகுதிகளுக்கு அனுப்பினார். ஆனால், இன்னைக்கு இவ்வளவு நவீன வசதிகள் இருந்தும் இவ்வளவு அறிவியல் வளர்ச்சிகள் இருந்தும், இவ்வளவு டெக்னாலஜி வளர்ச்சிகள் இருந்தும், பவானி, நொய்யல் ஆறு, அமராவதி ஆறு இணைப்பு திட்டத்திற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை. வாக்குறுதி நம்பர் 103 சொன்னாங்களே செஞ்சாங்களா? சரி ஏதாவது ஒரு பெரிய ப்ராஜெக்ட் போட்டு பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்குவோம். தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளை சுத்தப்படுத்துவோம்னு சொன்னாங்களே செஞ்சாங்களா? ஆனால் ஆற்று மணலை கொள்ளை அடிக்கிறதுல மட்டும் வேலையை கரெக்டா செய்வாங்க. இதை நான் ஏன் திரும்ப திரும்ப சொல்றேன். மக்களே நீங்க புரிஞ்சுக்கணும்.
ஆட்டையை போடும் திமுக அரசு
கொஞ்சம் அசந்தால் மற்ற மாவட்டங்களில் மணல் காணாமல் போன மாதிரி மலைகள் காணாமல் போன மாதிரி, நம்ம மாவட்டத்துல கனிம வளத்தை கடுத்து செம்மண் காணாமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மக்களே நம்ம மண்ணுக்கும், நம்ம ஆற்றுக்கும், நம்ம விவசாயிக்கும் தான் இந்த மோசமான நிலைமை. அதனால ஏதாவது தொழில் செஞ்சு பிழைக்கலாம் என பார்த்தால் அதுக்கும் எங்க விடுறாங்க? தொழில் பார்த்தால் 30 சதவீதம் நெசவாளர்களுக்கு கூலி பாக்கி அரசாங்கம். நம்ம நெசவாளர்கள் கிட்ட இருந்து கொள்முதல் செய்த வேட்டி சேலைக்கான கூலியை கூட போராடித்தான் வாங்க வேண்டியதா இருக்குது. அது சலுகையோ உதவியோ நலத்திட்டமோ, கிடைக்காது. நம்ம உழைப்புக்கான ஊதியம் நம்முடைய உரிமை அதுக்கே முடியவில்லை’’ எனப் பேசினார்.
