MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்த தேமுதிக... பிரேமலதா ரிவெஞ்ச்..! எந்தக் கூட்டணியில் தெரியுமா?

அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் இணைந்த தேமுதிக... பிரேமலதா ரிவெஞ்ச்..! எந்தக் கூட்டணியில் தெரியுமா?

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார்.

2 Min read
Author : Thiraviya raj
| Updated : Feb 19 2026, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைகிறது தேசிய முற்போக்கு திராவிட கழகம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி. கனிமொழி முன்னிலையில் திமுக கூட்டணியில் இணைந்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதாவுக்கு பொன்னாடை. போர்த்தி திமுக கூட்டணிக்கு வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

என்.டி.ஏ கூட்டணிக்கு தேமுதிக உறுதியாக வரும் என எதிரபார்த்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அமித் ஷாவிற்கு இது பெருத்த ஏமாற்றம். வலிமையான கூட்டணி அமையும் என எதிர்பார்த்த அதிமுக-பாஜக வின் எதிர்பார்ப்பு பொய்த்து உள்ளது. அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? என முடிவெடுக்காமல் இருந்து வந்த பிரேமலதா கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள கூட்டணியான திமுக கூட்டணி பக்கம் வந்துள்ளார்.

25
Image Credit : premalatha

ஈஷா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி நிகழ்ச்சியில் எஸ்.பி.வேலுமணியோடு இணைந்து பிரேமலதா கலந்து கொண்டதை வைத்து அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் கூட்டணி வலிமையாகும் என செய்திகள் பரவிய நிலையில் தற்போது பிரேமலதாவின் முடிவு பாஜக-அதிமுகவிற்கு நிச்சயம் பின்னடைவாகவே பார்க்கப்படும்.

2011 தேர்தலில் தேமுதிக அதிமுக உடன் கூட்டணி அமைத்ததால் அந்த தேர்தலில் வெற்றி பெற்றது அதிமுக. 2019, 2020களில் தேமுதிகவுக்கு ராஜ்யசபா தருவதாக வாக்குறுதி தந்து தரவில்லை என்பது தேமுதிகவிடம் அதிருப்தியாக இருந்தது. அதற்கு இப்போது பிரேமலதா எடப்பாடிக்கு பாடம் புகட்டியுள்ளார்.

Related Articles

Related image1
அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
35
Image Credit : Google

சமீபத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள் திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக ஒவ்வொரு தொகுதிகளிலும் குறைந்தது 5000 முதல் 25,000 வாக்குகளை கொண்டிருக்கும் தேமுதிகவை சேர்ப்பதன் மூலம் 200 தொகுதிகளை வெல்ல முடியும் என கணக்கு போட்டு காய் நகர்த்தி வந்தது.

தற்போது தேமுதிகவின் வரவு திமுக கூட்டணிக்கு கூடுதல் பலன். திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை ஏகதேசம் உறுதி செய்து விட்டதாக கருதப்படுகிறது.ஏற்கனவே 42-45% வாக்கு வங்கி வைத்துள்ள திமுக கூட்டணியில் தற்போது தேமுதிக இணையும் போது 200 தொகுதிகளில் வெற்றி என்ற ஸ்டாலினின் அரசியல் கணக்கு நிறைவேறும் சூழல் உறுதியாகிறது.

45
Image Credit : Asianet News

தேமுதிக விற்கு பக்கபலமாக இருக்க கூடிய தெலுங்கு பேசும் மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட சமூக வாக்குகளும் சிதறாமல் தேமுதிக விற்கு இம்முறை கிடைக்கும் இதை எல்லாம் கருத்தில் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளதாக தெரிகிறது. 2011 எதிர்க்கட்சி அந்ததிஸ்த்து பெற்ற தேமுதிக இடையே சரியான கூட்டணி அமைக்காமல் வலுவிழந்தது தற்போது திமுக கூட்டணியில் இணைந்ததன் மூலம் மூன்றாவது பெரிய மாநில கட்சியாக உயரும் வாய்ப்பு தேமுதிகவிற்கு கிடைக்கும்.

55
Image Credit : x

திமுக கூட்டணி மேலும் வலுவடைந்து 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை அடைய தேமுதிக உதவும் – தேமுதிக வின் இரண்டாவது இன்னிங்க்ஸ்ஸை தொடங்க திமுக கூட்டணி உதவும் ஆகவே இத் பிரேமலதாவின் அரசியல் சாதுர்ய முடியாக பார்க்கப்படுகிறது. இரு பக்கமும் வெற்றி சூழ்நிலை என்பதால் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.ஏற்கனவே வலுவிழந்துள்ள அதிமுக – பாஜக கூட்டணி தொண்டர்களை இச்செய்தி சோர்வுறச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

About the Author

TR
Thiraviya raj
பிரேமலதா விஜயகாந்த்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னைனா கசக்குது... கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா..? எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் நிர்வாகிகள்..!
Recommended image2
இது சரிப்படாதுங்க... ராமதாஸ் அணியை விரட்டிய எடப்பாடி..? இப்படியொரு சிக்கலா..?
Recommended image3
பிரசார யுக்தி.! திமுக சார்பில் களம் இறங்கும் சினிமா பட்டாளம்.?! கட்சி கொள்கைகள் குறித்து பாடம் எடுக்கும் பணியை துவக்கிய மா.செக்கள்.?!
Related Stories
Recommended image1
அஞ்சலியிடம் டைவர்ஸ் மேட்டரை உலறிய சரவணன்... மீனாவுக்கு ஷாக் கொடுத்த ராஜி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved