- Home
- Politics
- Ajith Support Vijay?!: "வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொல்லவில்லையாம்.! சட்டென பறந்து வந்த விளக்கம்.!
Ajith Support Vijay?!: "வதந்தி வேண்டாம்" - மாற்றம் தேவையில்லை என அஜித் சொல்லவில்லையாம்.! சட்டென பறந்து வந்த விளக்கம்.!
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் அஜித் வாக்களித்தபோது, 'மாற்றம் தேவையில்லை' என்று கூறியதாக ஒரு வதந்தி பரவியது. இந்தச் செய்தி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா இது முற்றிலும் ஆதாரமற்றது என்றும் விளக்கமளித்துள்ளார்.

ஏகே எப்போதுமே தல தான்
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்களும் அதிகாலையிலேயே தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்தனர். குறிப்பாக, நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார். அதேபோல், நடிகர் விஜய்யும் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து வந்து வாக்களித்தார். இவர்களின் வருகையால் வாக்குச்சாவடிகளில் உற்சாகம் நிலவியது.
சொல்லாமல் பரவிய செய்தி.!
இந்நிலையில், சமூக வலைதளங்களில் நடிகர் அஜித் குறித்து ஒரு தகவல் காட்டுத்தீயாகப் பரவியது. அஜித் வாக்களித்துவிட்டு வெளியே வரும்போது, அங்கிருந்த செய்தியாளர்கள் அவரிடம் தமிழகத்தில் "மாற்றம் தேவைப்படுகிறதா?" எனக் கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு அவர் "மாற்றம் தேவையில்லை" என்று பதிலளித்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "அஜித் அப்படிச் சொல்லியிருந்தால் அது நல்ல விஷயம் தானே" என்று இயல்பாகப் பதிலளித்துச் சென்றார்.
"வதந்திகளைப் பரப்ப வேண்டாம் மக்களே"
இந்தத் தகவல் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா உடனடியாக ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். "வதந்திகளைப் பரப்ப வேண்டாம்; அஜித் எங்கும் அப்படியொரு கருத்தைச் சொல்லவில்லை" என்று அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 'மாற்றம் தேவை' என்றோ அல்லது 'தேவையில்லை' என்றோ எந்த ஒரு அரசியல் நிலைப்பாட்டையும் அஜித் செய்தியாளர்களிடம் பகிரவில்லை என்றும், பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வாக்குச்சாவடிகளில் குவியும் இளைஞர்கள்
தற்போது தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டுப் பேருந்துகள் பற்றாக்குறை போன்ற சில சிரமங்கள் இருந்தாலும், மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். வதந்திகளைத் தவிர்த்துவிட்டு மக்கள் அனைவரும் தங்களின் கடமையைச் செய்ய வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கோரிக்கையாக உள்ளது.

