MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Weight Loss: திடீர்னு வெயிட் குறையுதா? அலட்சியமா இருக்காதீங்க.. இந்த ஆபத்தான 8 நோயின் அறிகுறிகளா இருக்கலாம்.!

Weight Loss: திடீர்னு வெயிட் குறையுதா? அலட்சியமா இருக்காதீங்க.. இந்த ஆபத்தான 8 நோயின் அறிகுறிகளா இருக்கலாம்.!

உடல் எடையானது திடீரென, எந்த வித காரணமின்றி குறைவது என்பது தீவிரமான உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம். உடல் எடையில் ஏற்படும் இந்த மாற்றம் சில நேரங்களில் ஆபத்தான நோய்களுக்கான எச்சரிக்கை மணியாகும்.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 03 2025, 12:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
காரணமின்றி எடை குறைதல்
Image Credit : stockPhoto

காரணமின்றி எடை குறைதல்

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரது இலக்காகவும், ஆரோக்கியத்திற்கான வழியாகவும் பார்க்கப்படுகிறது. இருப்பினும் சில சமயங்களில் திடீர் எடையிழப்பு என்பது சில நோய்களின் அறிகுறியாக இருக்கலாம். அனைத்து எடையிழப்புகளையும் ஆரோக்கியமானதாக கருத முடியாது. எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் ஆறு முதல் 12 மாதங்களுக்குள் உடல் எடையில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக இழப்பு ஏற்பட்டால் அது மருத்துவ ரீதியாக ‘திட்டமிடப்படாத எடையிழப்பு’ என்று வரையறுக்கப்படுகிறது. உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதில் சிரமப்பட்டாலோ, நோயை எதிர்த்து போராடினாலோ அல்லது ஹார்மோன் சீர்குலைவை அனுபவித்தாலோ இது போன்ற எடையிழப்புகள் ஏற்படலாம்.

25
ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் நீரிழிவு
Image Credit : stockPhoto

ஹைப்பர் தைராய்டிசம் மற்றும் நீரிழிவு

தைராய்டு சுரப்பி அதிகமாக சுரக்கும் பொழுது உடல் வளர்ச்சிதை மாற்றம் வேகமாக நடக்கும். இதன் காரணமாக உடல் எடையானது விரைவாக குறைய தொடங்கும். ஹைப்பர் தைராய்டிசம் இருப்பவர்களுக்கு இதயத்துடிப்பு அதிகரிப்பது, வியர்வை அதிகமாக வெளியேறுவது, தூக்கமின்மை, பதற்றம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படலாம். எடை குறைவு கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்று. உடல் செல்களுக்குள் குளுக்கோஸ் நுழைய முடியாததால், உடல் ஆற்றலுக்காக தசைகளையும் கொழுப்பையும் பயன்படுத்தத் துவங்கும். இதன் காரணமாக எடையிழப்பு அதிகமாகிறது எடையிழப்புடன் சேர்த்து அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், தீவிர சோர்வு, மங்கலான பார்வை, தசையிழப்பு ஆகியவையும் நீரிழிவுக்கான மற்ற அறிகுறிகள் ஆகும்.

Related Articles

Related image1
Skin Disease : அனைத்து தோல் நோய்களுக்கும் ஒரே தீர்வு.. இந்த இலைகளை இப்படி பயன்படுத்துங்க
Related image2
Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
35
புற்றுநோய் மற்றும் இதய நோய்கள்
Image Credit : Getty

புற்றுநோய் மற்றும் இதய நோய்கள்

புற்றுநோயின் ஆரம்ப கட்ட அறிகுறிகளில் உடல் எடையிழப்பும் முக்கிய அறிகுறியாகும். புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால் அது உடலின் ஆற்றலை உறிஞ்சுகிறது. இது உடல் எடையிழப்புக்கு வழிவகுக்கிறது. கணையம், வயிறு, உணவுக் குழாய், கல்லீரல் அல்லது நுரையீரல் புற்று நோய்களின் முதல் அறிகுறிகளில் ஒன்றாக விவரிக்கப்படாத எடையிழப்பு இருக்கிறது. சில வகையான இதய நோய்கள் குறிப்பாக இதய செயலிழப்பு இருக்கும் பொழுது உடல் திரவங்களை சரியாக வெளியேற்ற முடியாமல் போகிறது. இதன் காரணமாக பசியின்மையும் அதிக எடையிழப்பும் ஏற்படலாம்.

45
நுரையீரல் நோய்கள் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்
Image Credit : Getty

நுரையீரல் நோய்கள் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள்

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் போன்ற நுரையீரல் நோய்கள் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இது அதிக ஆற்றலை செலவழிப்பதால் படிப்படியாக உடல் எடை குறையத் துவங்கும். குரோன் நோய் அல்லது அல்சரைடிவ் கோலைடீஸ் போன்ற குடல் நோய்கள் செரிமான மண்டலத்தை பாதிக்கும். இதன் காரணமாக உடல் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை முழுமையாக உறிஞ்ச முடியாமல் போகிறது. இதுவும் உடல் எடையிழப்புக்கு காரணமாக அமைகிறது. சிலருக்கு தீவிரமான மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படும் பொழுது பசியின்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக உணவு உட்கொள்ளும் அளவு குறைந்து உடல் எடை குறையத் தொடங்கலாம். எச்ஐவி வைரஸ் தாக்கம் ஏற்படுபவர்களுக்கும் உடல் வலுவிழந்து திடீரென எடை குறையத் தொடங்கும். எய்ட்ஸ் நோய்க்கான பொதுவான அறிகுறியாக எடையிழப்பு உள்ளது.

55
மருத்துவ ஆலோசனை அவசியம்
Image Credit : stockPhoto

மருத்துவ ஆலோசனை அவசியம்

நீங்கள் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கிறீர்கள் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை. சரியான உணவு முறை, உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் உடல் எடையை குறைப்பது சரியான வழிகள் ஆகும். ஆனால் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமல் உங்கள் எடை குறைந்தால் குறிப்பாக சோர்வு, செரிமானப் பிரச்சனைகள், மனநிலை மாற்றங்களுடன் எடை குறைப்பும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். திட்டமிடப்படாத எடையிழப்பு சாதாரணமானதல்ல. இது மேற்குறிப்பிட்டப்பட்டுள்ள ஆபத்தான நோய்களின் ஆரம்ப கட்ட அறிகுறிகள் என்பதை உணருங்கள். எனவே மருத்துவ உதவியை ஆரம்பத்திலேயே நாடுவது என்பது அடிப்படை காரணத்தை கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதற்கு உதவி புரியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆரோக்கியம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Recommended image2
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?
Recommended image3
Bread Omelette for Breakfast : காலை உணவாக பிரட் ஆம்லெட் சாப்பிட்டுறது நல்லதா? தொடர்ந்து சாப்பிடுவறங்க இதை கவனிங்க
Related Stories
Recommended image1
Skin Disease : அனைத்து தோல் நோய்களுக்கும் ஒரே தீர்வு.. இந்த இலைகளை இப்படி பயன்படுத்துங்க
Recommended image2
Weight Loss Drinks : உடல் எடையை ஹெல்தியா குறைக்கணுமா? அப்ப இந்த ட்ரிங்க்ஸ்ல ஒன்னு குடிங்க
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved