MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • 80 வயது வரை இளமை.! 150 வயது வரை ஆயுட்காலம்.! ரகசிய இனக்குழு மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் தெரியுமா? இந்த ஒரு விதை தான் காரணமாம்.!

80 வயது வரை இளமை.! 150 வயது வரை ஆயுட்காலம்.! ரகசிய இனக்குழு மக்களின் நீண்ட ஆயுளுக்கான காரணம் தெரியுமா? இந்த ஒரு விதை தான் காரணமாம்.!

How the Hunza People Live for 150 Years : பாகிஸ்தானில் வாழும் ஒரு ரகசிய இனக்குழு பெண்கள் 150 வயது வரை வாழ்வதாகவும், அவர்கள் வயதானாலும் இளமையான தோற்றத்துடன் காட்சி அளிப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 16 2026, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
How the Hunza People Live for 150 Years
Image Credit : Gemini AI

How the Hunza People Live for 150 Years

தற்போதைய வாழ்க்கை முறை சூழலில் ஒரு மனிதன் 60 முதல் 70 ஆண்டுகள் வாழ்வது என்பதே மிகவும் கடினமாக்கி இருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்தியர்களின் ஆயுட்காலம் பெருமளவு குறைந்திருக்கிறது. ஆனால் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு இனக்குழு பெண்கள் அவர்களின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் தனித்துவமான கலாச்சாரத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்கள்.

26
ஹூன்சா இனக்குழு என்பவர்கள் யார்?
Image Credit : Getty

ஹூன்சா இனக்குழு என்பவர்கள் யார்?

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள கில்கிட்-பாலிடிஸ்தான் மாகாணத்தில் காரகோரம் மலைத்தொடரின் ஹூன்சா பள்ளத்தாக்குகளில் வசிக்கும் பெண்கள் நீண்ட ஆயுள், தனித்துவமான கலாச்சாரம் மற்றும் ஆரோக்கியத்திற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறார்கள். இவர்கள் வடக்கு பாகிஸ்தானில் உள்ள யாசின், ஹூன்சா மற்றும் நாகர் பள்ளத்தாக்குகளை தாயகமாக கொண்ட ஒரு பூர்வகுடி இனக்குழுக்கள் ஆகும். ஹூன்சா சமூகப் பெண்களின் சிறப்பம்சங்கள் குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Related Articles

Related image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Related image2
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
36
ஹூன்சா இனக்குழுவின் ரகசியம்
Image Credit : Getty

ஹூன்சா இனக்குழுவின் ரகசியம்

ஹூன்சா பெண்கள் சுமார் 150 ஆண்டுகள் வரை வாழ்வதாக கூறப்படுகிறது. இவர்கள் 60 முதல் 80 வயது வரை கூட மிக இளமையாக தோற்றம் அளிக்கின்றனர். அதற்கு முக்கிய காரணங்களாக பின்வருவன பார்க்கப்படுகின்றன. இவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து தாங்கள் விளைவிக்கும் ஆப்ரிக்காட், வாதுமை கொட்டைகள், தானியங்கள் மற்றும் காய்கறிகளை உண்கின்றனர். இமயமலையின் பனிப்பாறைகளில் இருந்து உருகி வரும் தாதுக்கள் நிறைந்த நீரையை குடிக்கின்றனர். மலைப்பாங்கான பகுதிகளில் வசிப்பதால் அன்றாட வேலைகளுக்காக நீண்ட தூரம் நடப்பதும், மலையேறுவதும் இவர்களை உடல் அளவில் வலிமையாக வைத்திருக்கிறது.

 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RANIM 🌞- Holistic Health Mommy (@ranim_t)

46
ஹூன்சா சமூகம் பற்றி தெரிய வந்த நிகழ்வு
Image Credit : Getty

ஹூன்சா சமூகம் பற்றி தெரிய வந்த நிகழ்வு

1984 ஆம் ஆண்டு அப்துல் முஃபாத் என்கிற நபர் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவரது பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த ஆண்டு 1832 என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் மூலம் அவருக்கு 152 வயது ஆகியிருந்தது தெரியவந்தது. அவருடைய தோற்றம் மற்றும் வயது இரண்டிற்கும் இடையே இருந்த வித்தியாசத்தைக் கண்ட அதிகாரிகள் இது பிழையாக இருக்கலாம் என்று கருதினர். பின்னர் அவரை விசாரித்த போது அவர் உண்மையில் 152 வயதுடையவர் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்துல் முஃபாத் பாகிஸ்தானின் ஹூன்சா சமூகத்தைச் சேர்ந்தவர் என கண்டறிந்தனர். அதன் பின்னர் இந்த சமூகத்தைப் பற்றியும், அவர்களின் இளமை மற்றும் நீண்ட ஆயுளுக்கான காரணங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

56
புற்றுநோயை தடுக்கும் ஆப்ரிகாட் பழங்கள்
Image Credit : Getty

புற்றுநோயை தடுக்கும் ஆப்ரிகாட் பழங்கள்

ஹூன்சா இனக்குழு மக்கள் புற்றுநோய் அற்ற சமூகமாக திகழ்கின்றனர். இந்த மக்களில் இதுவரை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டதாகவோ, புற்றுநோயால் உயிரிழந்ததாகவோ எந்த ஒரு தகவலும் இல்லை. அதற்கு முக்கிய காரணம் இவர்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளும் ஆப்ரிகாட் பழங்கள்தான். இதில் உள்ள வைட்டமின் B17 புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது. இந்த இனக்குழு பெண்கள் 65 வயதாகிய பின்னரும் கூட குழந்தைகளை பெற்றெடுக்கும் திறன் கொண்டிருக்கின்றனர். இவர்களின் நீண்ட நாள் ஆயுளுக்குப் பின்னால் அவர்கள் உண்ணும் தானியங்களும், கொட்டைகளும் அடங்கி இருக்கிறது. இவர்கள் ஆப்ரிகாட் எனப்படும் பாதாமி பழங்களையும், வால்நட்ஸ்களையும் அதிகம் உண்பதால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைந்து, நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகுக்கிறது.

66
150 ஆண்டுகள் வரை வாழும் ரகசிய இனக்குழு
Image Credit : Gemini AI

150 ஆண்டுகள் வரை வாழும் ரகசிய இனக்குழு

மேலும் இந்த இனக்குழு மக்கள் இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை விட உணவுகளை உட்கொள்வதில்லை. இந்த காலகட்டத்தில் அவர்கள் பழச்சாறுகளை மட்டுமே பருகுகின்றனர். மேலும் நீண்ட தூரம் நடைப்பயிற்சி செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். அவர்களின் உணவு முறையில் உலர் பழங்கள், பச்சை காய்கறிகள், பழங்கள், முட்டைகள், பால் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும் பல தோட்டங்களை பராமரிப்பது, அறுவடை செய்வது, விவசாயம் செய்வது என்று ஆண்களுக்கு நிகராக இங்கு பெண்களும் உழைக்கின்றனர். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, கடினமான உழைப்பு ஆகியவையே இவர்களின் நீண்ட ஆயுளுக்கும் மகிழ்ச்சிக்கும் அடிப்படை தூண்களாக உள்ளன.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
உலகம்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kitchen Hacks | இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
Recommended image2
Kitchen Hacks: இந்த டிப்ஸ் தெரிஞ்சா குக்கிங் ரொம்ப ஈஸி..! இனி 10 நிமிடத்திலேயே சமையல் ஓவர்.!
Recommended image3
ஒரே மெத்தையை ரொம்ப வருஷமா பயன்படுத்துறீங்களா? இத படிங்க முதல்ல.! எவ்வளவு பிரச்சினைகள் வரும் தெரியுமா?
Related Stories
Recommended image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Recommended image2
அம்பானி வீட்டில் சப்பாத்தி சுடுபவர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.! சாப்ட்வேர் என்ஜினீயர் விட அதிகமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved