MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் எடாகூடமாக மழை கொட்டித்தீர்க்க போகுதாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் எடாகூடமாக மழை கொட்டித்தீர்க்க போகுதாம்! வானிலை மையம் எச்சரிக்கை!

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

2 Min read
Author : vinoth kumar
Published : Aug 01 2025, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சென்னை வானிலை மையம்
Image Credit : our own

சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூரில் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர். மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

28
 கனமழை பெய்ய வாய்ப்பு
Image Credit : Google

கனமழை பெய்ய வாய்ப்பு

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
300 சவரன் போட்டும் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!
Related image2
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்.! இனி மே மாதம் லீவு இல்லை! அரசு அதிரடி முடிவு?
38
ஆகஸ்ட் 3ம் தேதி
Image Credit : Google

ஆகஸ்ட் 3ம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

48
ஆகஸ்ட் 4ம் தேதி
Image Credit : Google

ஆகஸ்ட் 4ம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

58
ஆகஸ்ட் 6ம் தேதி
Image Credit : ANI

ஆகஸ்ட் 6ம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

68
ஆகஸ்ட் 7ம் தேதி
Image Credit : ANI

ஆகஸ்ட் 7ம் தேதி

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

78
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : ANI

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் 5 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஐந்து தினங்களில், அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என தெரிவித்துள்ளது.

88
சென்னை வானிலை நிலவரம்
Image Credit : our own

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மழை செய்திகள்
தமிழ்நாடு மழை
கனமழை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்! நாளை முதல் சுங்க கட்டணம் அதிரடி குறைப்பு.. எந்தெந்த சாலைகள் தெரியுமா..?
Recommended image2
இந்தியா ஒரு மத நாடாக மாறும்... இஸ்லாமியர்களுக்கு விசுவாச சான்றிதழ் தேவையில்லை.. ஓவைசி சரவெடி..!
Recommended image3
ஏர் இந்தியா விமான விபத்து திட்டமிட்ட சதி? வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய விமானி? அதிர்ச்சி தகவல்!
Related Stories
Recommended image1
300 சவரன் போட்டும் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யா வழக்கில் திடீர் திருப்பம்! போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் மாற்றம்.! இனி மே மாதம் லீவு இல்லை! அரசு அதிரடி முடிவு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved