- Home
- உடல்நலம்
- Walking During Pregnancy : கர்ப்பிணிகளே! தினமும் இத்தனை 'காலடிகள்' நடந்தா போதும்! தாயும் சேயும் நலமா இருப்பீங்க!
Walking During Pregnancy : கர்ப்பிணிகளே! தினமும் இத்தனை 'காலடிகள்' நடந்தா போதும்! தாயும் சேயும் நலமா இருப்பீங்க!
கர்ப்பிணிகள் எப்படி, எவ்வளவு அடிகள் நடக்க வேண்டும்? தினமும் நடப்பதால் கிடைக்கும் நன்மை என்னவென்று இங்கு காணலாம்.

Walking During Pregnancy
கர்ப்ப காலத்தில் தினமும் வாக்கிங் செல்வது தாய் மற்றும் சேய்க்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், தினமும் எப்படி? எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? நடப்பதால் எந்தமாதிரியான நன்மைகள் கிடைக்கும்? இதுபோன்ற பல கேள்விகள் கர்ப்பிணிகளுக்கு எழும். இதற்கான பதிலை இப்போது இந்த பதிவில் காணலாம்.
கர்ப்பிணிகள் தினமும் நடக்க வேண்டிய அடிகள் :
கர்ப்பிணிகள் தினமும் 5000-10,000 அடிகள் வரை நடப்பது போதுமானது. ஆனால் ஒரே நாளில் இப்படி நடப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலை வேண்டாம். நாள் ஒன்றுக்கு இதை பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டு நடக்கலாம். அதாவது காலை, மதியம், மாலை மற்றும் இரவு உணவுக்கு பிறகு 1000 அடிகள் என்று பிரித்து நடக்கவும்.
கர்ப்பகாலத்தில் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள் :
- கர்ப்ப காலத்தில் அதிகரிக்கும் இடையே கட்டுக்குள் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.
- சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
- நடப்பதால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.
- சுகப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமுள்ளன.
கர்ப்பகாலத்தில் நடக்கும் போது மனதில் கொள்ள வேண்டியவை :
- கர்ப்ப காலத்தில் நடக்கும் போது மெதுவாகவும், நிதானமாகவும் நடக்கவும்.
- நடக்கும் போது சோர்வாக உணர்ந்தால் உடனே நடப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
- நீண்ட நேரம் நடந்தால் கையில் தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லவும்.
- வெளியிடங்களில் நடக்கும் போது தனியாக நடக்க வேண்டாம். குழுவாக நடக்கவும். இது மன அழுத்தத்தை குறைக்கும்.
- நடக்கும்போது நடப்பயிற்சிக்கு ஏற்ற காலணிகள், ஆடைகளை அணியவும்.
- மலைப்பகுதியில், சறுக்கலான பகுதிகளில் நடக்க வேண்டாம்.
- கர்ப்பத்தின் இறுதி மாதத்தில் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். எனவே அந்தசமயத்தில் படிக்கட்டுகளில் ஏறி இறங்க வேண்டாம்.
- நடைப்பயிற்சி செய்யும் போது நெஞ்சு வலி, கால் வீக்கம், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்பட்டால் உடனே நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.
- கர்ப்பகாலத்தில் நடைபயிற்சி செய்வது ஆரோக்கியமானது என்றாலும், நடக்கும் முன் ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை கேட்பது நல்லது.

