- Home
- உடல்நலம்
- Lung Healthy Foods : நுரையீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்! சுவாசக் கோளாறே வராமல் இருக்க இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க
Lung Healthy Foods : நுரையீரல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம்! சுவாசக் கோளாறே வராமல் இருக்க இந்த 7 உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்க
நுரையீரல் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். எனவே நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடுங்கள்.

கீரை வகைகள்
கீரை வகைகளில் வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.
பெர்ரிகள்
பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடி, நுரையீரலின் செயல்பாட்டை ஆதரிக்கிறது.
மஞ்சள்
மஞ்சளில் குர்குமின் உள்ளது. இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நுரையீரல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நுரையீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
நட்ஸ்கள்
பாதாம், வால்நட், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நுரையீரலைப் பாதுகாக்கின்றன.
கிரீன் டீ
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து, வீக்கத்தைத் தடுத்து, நுரையீரலைப் பாதுகாக்க உதவுகிறது.
இஞ்சி
இஞ்சி பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸidenட் பண்புகள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கின்றன.

