- Home
- உடல்நலம்
- அழகு குறிப்புகள்
- Carrots for Glowing Skin : முகம் தங்கம் போல ஜொலிக்க கேரட்! இப்படி யூஸ் பண்ணுங்க
Carrots for Glowing Skin : முகம் தங்கம் போல ஜொலிக்க கேரட்! இப்படி யூஸ் பண்ணுங்க
சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்க கேரட்டை பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெண்கள் தங்களது சருமத்தை அழகாக வைக்க பல்வேறு அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவார்கள். ஆனால் செயற்கையான பொருளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான முறையை பின்பற்றி சருமத்தை பளபளப்பாக வைக்கலாம். இதற்கு கேரட் உங்களுக்கு உதவும். ஆம், கேரட் சமையலுக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
கேரட்டில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மேலும் அதில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் சருமத்தில் வயதான அறிகுறிகள் மற்றும் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். மேலும் வெயிலால் சருமத்தின் நிறம் மாறி இருக்கும் அதை நீக்க கேரட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுதவிர, முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை குறைக்கவும், வறண்ட சருமத்தை மென்மையாக்கவும் கேரட் உதவுகிறது. எனவே இந்த பதிவில் சரும பளபளப்பிற்கு கேரட்டை பயன்படுத்துவது எப்படி என்று பார்க்கலாம்.
கேரட்டை பயன்படுத்துவது எப்படி?
கேரட் ஃபேஸ் பேக் : கேரட்டை வேக வைத்து மசித்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் தயிர் கழுத்து முகத்தில் ஃபேஸ் பேக்காக போடவும் 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைக்கும்.
கேரட் ஜூஸ் டோனர் : கேரட் சாற்றை வடிகட்டி அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் ல். தினமும் முகத்தை கழுவி பிறகு இதை டோனராக பயன்படுத்துங்கள்.
வயதான எதிர்ப்பு நீங்க : கேரட் சாறுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து அதை முகத்தில் தடவி வந்தால் சருமத்தின் சுருக்கங்கள் மற்றும் வறட்சி குறையும்.
கேரட் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் : கேரட் சாறுடன் கடலை மாவு கலந்து பேஸ்ட் போலாக்கி அதை முகத்தில் தடவி வந்தால் சருமத்தின் நிறம் மாறி சருமம் பிரகாசமாகும்.
கேரட்டை சரும பராமரிப்பு பொருளாக இப்படி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தை இயற்கையாக பளபளக்க செய்யலாம். மேலும் என்றும் இளமையாக இருப்பீர்கள்.

