MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மொத்தம் 5 வீடியோக்கள்.! எல்லாம் முடிச்சுட்டு எஸ்கேப் ஆன விஜய் tv புகழ் நாஞ்சில் விஜயன்.! குமுறும் திருநங்கை

மொத்தம் 5 வீடியோக்கள்.! எல்லாம் முடிச்சுட்டு எஸ்கேப் ஆன விஜய் tv புகழ் நாஞ்சில் விஜயன்.! குமுறும் திருநங்கை

Nanjil Vijayan: நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த திருநங்கை வைஷு என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். 

2 Min read
Author : vinoth kumar
Published : Sep 12 2025, 12:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நாஞ்சில் விஜயன்
Image Credit : our own

நாஞ்சில் விஜயன்

விஜய் டிவியில் ஸ்டாண்ட் ஆப் காமெடி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். கலக்க போவது யாரு நிகழ்ச்சி தான் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, அடுத்தடுத்து பல மேடை நிகழ்ச்சிகளில் லேடிஸ் கெட்டப்பில் தோன்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். நாஞ்சில் விஜயன் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்கு 2023ம் ஆண்டு மரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

24
திருநங்கை வைஷு
Image Credit : Asianet News

திருநங்கை வைஷு

இந்நிலையில் நாஞ்சில் விஜயன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த திருநங்கை வைஷு என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்தார். அதில் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசைவார்த்தை கூறி வேலையை முடித்து விட்டு தற்போது வேண்டாம் என்றால் என்ன அர்த்தம். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

Related Articles

Related image1
100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!
Related image2
காலையிலேயே போத்தீஸ் நிறுவனங்களை ரவுண்ட் கட்டும் ஐடி! 25 இடங்களில் சோதனைக்கு இது காரணமா?
34
நாஞ்சில் விஜயன்
Image Credit : Asianet News

நாஞ்சில் விஜயன்

இந்த விவகாரம் குறித்து வைஷு ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில், நாஞ்சில் விஜயன் திருமணத்திற்குப் பிறகும் இருவரும் கணவன் மனைவி போல் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளார். நியூ இயர் அன்று கூட நாங்கள் இருவரும் தான் பாண்டிச்சேரியில் ஒன்றாக இருந்தோம். இரவு முழுக்க அவர் என்னுடன் தான் இருந்தார். நாஞ்சில் விஜயனுக்குக் குழந்தை பிறந்த மூன்று மாதங்களுக்கு பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அவர் தன்னை ஒதுக்க ஆரம்பித்துவிட்டார். நாஞ்சில் விஜயன் மனைவிக்கு எனக்கும் இருக்கும் உறவு எல்லாம் தெரியும். தெரிந்துதான் அவர் திருமணம் செய்து கொண்டார். நாஞ்சில் விஜயனின் விஷேச நிகழ்ச்சிகள் அனைத்திலும் நான் இருப்பேன்.

44
திருநங்கை
Image Credit : Asianet News

திருநங்கை

தனது காதலை முதலில் அவரிடம் தெரிவித்ததாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் ஏற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள அனுமதி கேட்டபோது, தன்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்பதால், அவர் வேறு திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் அனுமதி அளித்ததாக வைஷு கூறினார். நான் திருநங்கை என்பது இப்போதுதான் அவருக்குத் தெரிந்ததா? நாங்கள் பல நாட்கள் ஒரே ரூமில் கணவன் மனைவி போல வாழ்ந்தோம். அப்போது நான் திருநங்கை என்பது அவருக்குத் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
எல்லாம் முடிந்தது என நினைத்த அஞ்சலிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சத்யா செய்த அந்த ரகசிய உதவி என்ன?! கெட்டிமேளம் அப்டேட்.!
Recommended image2
Singappenne : ஆனந்தி - அன்புவின் ஜாலி மொமெண்ட்ஸ்! கோகிலாவை அதிர வைத்த மாமனார் & மாமியார்.. கதையில் புதிய திருப்பம்!
Recommended image3
"வீரம் உண்டு வெற்றி உண்டு" - அதிரடி அறிவிப்புடன் களமிறங்கும் சோயோன்.! இசை ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்.! எப்போ தெரியுமா?
Related Stories
Recommended image1
100க்கும் மேற்பட்ட கார்கள்! கெத்து காட்டிய நிர்வாகிகள்! உற்சாகத்தில் செங்கோட்டையன்! அலறும் இபிஎஸ்!
Recommended image2
காலையிலேயே போத்தீஸ் நிறுவனங்களை ரவுண்ட் கட்டும் ஐடி! 25 இடங்களில் சோதனைக்கு இது காரணமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved