- Home
- Cinema
- விஜய் ஹாட்ரிக் ஹிட் அடிச்ச ஆண்டு... தமிழ் சினிமாவுக்கு அதிக வெற்றியை வாரி வழங்கிய வருஷம் இதுதான்..!
விஜய் ஹாட்ரிக் ஹிட் அடிச்ச ஆண்டு... தமிழ் சினிமாவுக்கு அதிக வெற்றியை வாரி வழங்கிய வருஷம் இதுதான்..!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், நடிப்பின் நாயகன் சூர்யா, சீயான் விக்ரம் ஆகியோர் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களைக் கொடுத்த தமிழ் சினிமாவின் லக்கி ஆன வருஷம் பற்றி பார்க்கலாம்.

Lucky year of Tamil cinema
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோர் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஒரு வருடத்தைப் பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த வருடத்தில் விஜய் மட்டும் மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஒரு படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருக்கிறார். நடிகை நயன்தாரா நாயகியாக அறிமுகமான வருஷமும் இதுதான். அநேகமாக கண்டுபிடித்திருப்பீர்கள். தமிழ் சினிமாவின் அந்த லக்கியான வருஷம் வேறெதுவுமில்லை... 2005-ம் ஆண்டு தான். அந்த ஆண்டில் என்னென்ன ஹிட் படங்கள் வந்தது என்பதை பார்க்கலாம்.
சந்திரமுகி
தமிழ் சினிமாவில் வந்த ஒரு சிறந்த சைக்கலாஜிக்கல் காமெடி ஹாரர் திரைப்படம் இது. பி வாசு இயக்கிய இப்படத்தில் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது. ஹாரருக்கும் பஞ்சமிருக்காது. இதில் ரஜினிகாந்த் உடன் ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
அந்நியன்
மல்டிபில் டிசார்டர் கான்செப்டை மையமாக வச்சு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அந்நியன். ஒரு நடிகர் மூன்று வெவ்வேறு விதமான வேடங்களில் நடித்து பார்த்திருப்போம். ஆனால் ஒரு மனிதருக்குள்ளேயே மூன்று விதமான கேரக்டர் இருப்பது போல் காட்டி ஒரு மிரட்டலான படத்தை கொடுத்திருந்தார் ஷங்கர். அதற்கு விக்ரமின் நடிப்பு மிகப்பெரிய பலமாக அமைந்திருந்தது.
கஜினி
சஞ்சய் ராமசாமியையும், கல்பனாவையும் நம்மால் மறக்கவே முடியாது. ஷார்ட் டைம் மெமரி லாஸ்-ஐ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் இந்த கஜினி. படம் சூப்பராக இருந்தாலும் அதன் கிளைமாக்ஸ் நமக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இப்படம் சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
ஹாட்ரிக் ஹிட் கொடுத்த விஜய்
திருப்பாச்சி, ஆக்ஷன், எமோஷன் கலந்த ஒரு மாஸான கமர்ஷியம் படமாக வெளியாகி ஹிட் ஆனது. அண்ணன் - தங்கை பாசத்தை ரொம்ப அழகா காட்டி இருந்தார்கள்.
அதே வருஷத்தில் அதே மாதிரியான ஒரு எமோஷன் கலந்த படமாக சிவகாசியும் ரிலீஸ் ஆனது. இந்த இரண்டு படங்களையும் பேரரசு தான் இயக்கி இருந்தார்.
இந்த இரண்டு படங்களுக்கும் நேர் எதிராக விஜய், 2005-ல் நடித்த படம் தான் சச்சின். இதில் ஒரு சாக்லேட் பாய் லுக்கில் நடித்திருப்பார் விஜய். இன்றளவும் இப்படம் ஒரு புத்துணர்ச்சியோடு இருக்கும்.
ஐயா
இந்த படத்தை பார்த்துவிட்டு அந்த டைம்ல செங்கலை வைத்து சாமி கும்பிடாதவங்க இருந்திருக்கவே முடியாது. நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானது இந்த படத்தில் தான். ஹரி இயக்கிய இப்படத்தில் தந்தை - மகன் என இரண்டு வேடங்களிலும் தூள் கிளப்பி இருப்பார் சரத்குமார்.
2005-ல் வந்த சிறந்த படங்கள்
சண்டக்கோழி
நடிகர் விஷால், ஆக்ஷன் ஹீரோவாக உருவெடுத்த படம் தான் சண்டக்கோழி. விஷாலின் 2வது படம் இது. இப்படத்தை லிங்கு சாமி இயக்கி இருந்தார்.
ஜித்தன்
மறையக்கூடிய சூப்பர் பவர் கிடைத்தால் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை ரொம்ப அழகா காட்டிய படம் தான் ஜித்தன். இதைப்பார்த்த பலரும் நமக்கும் அந்த பவர் வரக்கூடாதா என ஏங்கவைத்த படம் இது.
ஒரு கல்லூரியின் கதை
பிரெண்டு சரியாக வேண்டும் என்பதற்காக காலேஜ் லைஃபையே அவருடைய நண்பர்கள் அப்படியே ரீ கிரியேட் செய்திருப்பார்கள். இந்தப் படம் மனதுக்கு நெருக்கமானதாக இருக்கும். இதில் ஆர்யா ஹீரோவாக நடித்திருந்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

