- Home
- Cinema
- வைரமுத்து சொன்ன 'நோ'.. பா. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்! வெற்றிக் கொடி கட்டு படத்தின் பாடல் Hit ஆன கதை!
வைரமுத்து சொன்ன 'நோ'.. பா. விஜய்க்கு அடித்த ஜாக்பாட்! வெற்றிக் கொடி கட்டு படத்தின் பாடல் Hit ஆன கதை!
Vairamuthu Refused to Write Karupputhan Enakku Pidicha Colouru Song Lyrics: தமிழ் சினிமாவில் உணர்ச்சி மிகுந்த ஏராளமான பாடல்களுக்கு தனி அடையாளம் கொடுத்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் கோபத்தில் பாதியிலேயே விட்டு சென்ற பாடல் குறித்து பார்ப்போம்.

இயக்குனர் சேரன்
பல வசூல் சாதனை செய்த படங்களை இயக்கிய இயக்குனர் சேரன் தனது சினிமா பயணத்தை கே.எஸ். ரவிக்குமார் அவர்களிடம் உதவி இயக்குனராக தொடங்கியவர். சினிமாவின் நுணுக்கங்களை அவரிடம் கற்றுக்கொண்ட அவர், 1997ஆம் ஆண்டு வெளியான “பாரதி கண்ணம்மா” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
வெற்றி கொடி கட்டு
சேரனின் முக்கிய படங்களில் ஒன்றான “வெற்றி கொடி கட்டு” படம் 2000ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் முரளி, பார்த்திபன், மீனா, மாளவிகா போன்ற பிரபல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படம் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்களின் ஏமாற்றம் குறித்த வழியையும், சொந்த ஊரில் உழைத்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தையும் அழகாக எடுத்துக்காட்டியது.
பாடலுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை
இந்த படத்தின் மற்றொரு சிறப்பு அதன் பாடல்கள். இந்த படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு பாடலையும் வெவ்வேறு பாடலாசிரியர்கள் எழுதியிருந்தனர். அதில் “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” என்ற பாடல் மட்டும் இன்றளவும் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான பாடலாக உள்ளது. இந்த பாடலை பா. விஜய் எழுதியிருந்தார். ஆனால் இந்த பாடலுக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் உள்ளது. முதலில் இந்த பாடலை எழுத தொடங்கியது வைரமுத்து தான். அவர் இந்த பாடலை முழுக்க தமிழில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “கருப்பு தான் எனக்கு புடிச்ச வர்ணம்” என்று தொடங்கினார். அவரது நோக்கம் தமிழ் மொழியின் அழகை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான்.
கருத்து வேறுபாடு
ஆனால் இயக்குனர் சேரன், பாடலில் கொஞ்சம் ஆங்கில வார்த்தைகள் சேர்த்தால் அது இன்னும் பலருக்கு எளிதாக சேரும், மேலும் பாடல் விரைவில் பிரபலமாகும் என்று எண்ணினார். இதை வைரமுத்து ஏற்கவில்லை. அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து, பாடல் முழுவதும் தமிழில் தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அந்த பாடலை தொடர்ந்து எழுத வைரமுத்து முன்வரவில்லை. பல முறை அவரை அணுகிய போதும் அவர் சேரனின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் தான் இயக்குனர் சேரன் அந்த பாடலை முழுமையாக எழுதும் பொறுப்பை பா. விஜயிடம் கொடுத்தார். அவர் எழுதிய வடிவத்தில் அந்த பாடல் உருவாகி, பின்னர் வெளியானது.
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு
படம் வெளியான பிறகு “கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு” பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. பட்டி தொட்டி எங்கும் இந்த பாடல் ஒலித்தது. இன்று வரை அந்த பாடல் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. ஒரு பாடலின் பின்னால் நடந்த இந்த சிறிய சம்பவம் கூட, சினிமாவில் கருத்து வேறுபாடுகள் எப்படி புதிய வெற்றிகளை உருவாக்குகிறது என்பதை காட்டுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.