- Home
- Cinema
- கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
Sivakarthikeyan Car Accident Chennai : சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நிலையில் அவரே பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளார்.

Actor Sivakarthikeyan Settles Road Dispute
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் பராசக்தி. இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் சிவகார்த்திகேயன் பிஸியாக இருந்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இது இவரது 25ஆவது படம். இவருடன் இணைந்து அதர்வா, ரவி மோகன், ஸ்ரீ லீலா ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது ஜிவியின் 100ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sivakarthikeyan Real Life Amaran Moment
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் World Of Parasakthi என்ற பெயரில் புரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் பாரம்பரிய முறையில் உடை அணிந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் சிவகார்த்திகேயன் பேசும் போது இந்தப் படம் தனக்கு முக்கியமான படம். படத்தில் நடித்தவர்களைப் பற்றி பேசுவதற்கு நிறைய இருக்கிறது என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
SK Car Accident Latest News Today
சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் சென்று கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் டிரைவருக்கும், அவர் பாதிப்பு ஏற்படுத்திய கார் டிரைவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் காரிலிருந்து இறங்கி வந்து இருவரும் சமாதானம் செய்து வைத்துள்ளார். போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் காருக்கு சேதாரம் ஏற்பட்டிருந்தால் அதற்கான தொகையை தான் ஏற்றுக் கொள்வதாக சிவகார்த்திகேயன் கூறியதாக சொல்லப்படுகிறது.
Sivakarthikeyan Car Accident Chennai
ஆனால், அவரது கார் மோதிய கார் உரிமையாளர் இல்லை இல்லை எங்களது மீது தான் தவறு இருக்கிறது என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு அங்கிருந்து சென்றதாக சொல்லப்படுகிறது. பெரிய சேதாரமும் இல்லை என்பதால் சிறிது நேரத்திற்குள்ளாக இந்த சம்பவம் முடிக்கப்பட்டுள்ளது. எனினும், சிவகார்த்திகேயன் என்பதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றபடி எந்தவித பாதிப்போ, சேதாரமோ இல்லையாம். சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை 14ஆம் தேதிக்கு முன்னதாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைவு. ஏனென்றால், ஜன நாயகன் ஜனவரி 9ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்பதால் திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.