MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிம்பு முதல் தனுஷ் வரை.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள்..

சிம்பு முதல் தனுஷ் வரை.. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள்..

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சினிமாவில் அறிமுகமானது முதல் இன்றுவரை சந்தித்த பல்வேறு சர்ச்சைகளை இந்த கட்டுரை விவரிக்கிறது. சிம்பு, பிரபுதேவாவுடனான காதல், திருமணம், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றது.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 18 2026, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா
Image Credit : Instagram

லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சினிமா என்று வந்தாலே ஆண், பெண் இருவரையும் சுற்றி பல சர்ச்சைகள் இருப்பது வழக்கம். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் லேடிஸ் சூப்பர் ஸ்டாரான நயன்தாரா தான். இவர் சினிமாவில் அறிமுகமானது முதல் இன்று வரை அவரை சுற்றிவரும் சர்சைகள் ஓய்ந்தபாடியில்லை. இந்நிலையில் லேடிஸ் சூப்பர் நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

28
நயன்தாரா - சிம்பு
Image Credit : Google

நயன்தாரா - சிம்பு

நடிகை நயன்தாராவும், நடிகர் சிம்புவும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்தபோது காதலித்து வந்தனர். அப்படத்திற்கு பின் இருவரும் ஜோடியாக பட விழாக்களிலும் கலந்துகொண்டனர். நன்றாக சென்றுகொண்டிருந்த இவர்களின் காதல் திடீரென முடிவுக்கு வந்தது. இருவரும் படுக்கையறையில் முத்தம் கொடுத்தபடி இருக்கும் புகைப்படம் தான். அந்த புகைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்பின் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர்.

Related Articles

Related image1
தாய் பாசத்தில் நயனை அடிச்சுக்க ஆளே இல்ல... ஒரே ஒரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி..!
Related image2
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்... பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
38
நயன்தாரா - பிரபுதேவா
Image Credit : Instagram

நயன்தாரா - பிரபுதேவா

சிம்புவை தொடர்ந்து பிரபுதேவா மீது காதல் கொண்டார். அப்போது பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவரை எப்படி நயன்தாரா காதலிக்கலாம் என்று கண்டனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்த பிரபுதேவாவின் மனைவி ரம்லத், நயன்தாராவை எங்காவது பார்த்தால் எட்டி உதைப்பேன் என பேசி இருந்தது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

48
நயன்தாரா - தனுஷ்
Image Credit : Instagram

நயன்தாரா - தனுஷ்

நடிகை நயன்தாராவும் தனுஷும் நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இதன் காரணமாக தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் திரைப்படத்தில் சம்பளமே வாங்காமல் ஒரு பாடலுக்கு நடனமாடி கொடுத்தார் நயன்தாரா. இதையடுத்து நயன்தாராவை வைத்து நானும் ரெளடி தான் என்கிற படத்தை தனுஷ் இயக்கினார். இப்படத்தில் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. பின்னர் தன் சொந்த காசை செலவழித்து அப்படத்தை முடித்தார் நயன்தாரா.

58
நயன்தாரா - அல்லு அர்ஜுன்
Image Credit : Asianet News

நயன்தாரா - அல்லு அர்ஜுன்

நடிகை நயன்தாரா நானும் ரெளடி தான் படத்திற்காக விருது வாங்க மேடையேறிய போது, அங்கு விருது வழங்க வந்த அல்லு அர்ஜுனிடம் இருந்து விருதை வாங்க மறுத்து, அந்த விருதை விக்னேஷ் சிவன் கையால் வாங்குவேன் என கூறிவிட்டார். இப்படி மேடையிலேயே நயன்தாரா தன்னை இன்சல்ட் பண்ணியதால் அவருடன் நடிக்கவே கூடாது என முடிவெடுத்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

68
நயன்தாரா கல்யாணம்
Image Credit : Instagram/ Vignesh Shivan

நயன்தாரா கல்யாணம்

நடிகை நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தது மட்டுமின்றி, அங்கு கோவில் வளாகத்தில் போட்டோஷூட்டும் நடத்தினர். அப்போது நயன்தாரா காலணி அணிந்திருந்தது சர்ச்சை ஏற்படுத்தியதை அடுத்து விக்னேஷ் சிவன் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

78
நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி
Image Credit : Asianet News

நயன்தாரா பிளாஸ்டிக் சர்ஜரி

நடிகை நயன்தாரா 40 வயதிலும் இளமை குறையாமல் இருக்கிறார். அவர் தன் அழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாக சர்ச்சை எழுந்தது. அதனால் தான் அவர் முகம் மாறி இருப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இதற்கு தனது முகம் மாறியதற்கு காரணம் டயட் தான். நான் எந்தவித சர்ஜரியும் செய்யவில்லை என விளக்கம் அளித்தார்.

88
வாடகைத் தாய் சர்ச்சை
Image Credit : Asianet News

வாடகைத் தாய் சர்ச்சை

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. வாடகைத் தாய் மூலம் அவர் அக்குழந்தைகளை பெற்றுக்கொண்டார். திருமணத்துக்கு முன்னரே வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வது குற்றம் என்பதால் சட்ட விதிகளை மீறி நயன்தாரா குழந்தைகளை பெற்றுக் கொண்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், தான் கடந்த 2019-ம் ஆண்டே விக்னேஷ் சிவனை பதிவு திருமணம் செய்துகொண்டதாக கூறி நயன்தாரா. சினிமா உலகை அதிர்ச்சி அடைய செய்தார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சினிமா
நயன்தாரா
சிலம்பரசன்
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சவால்விட்ட எம்ஜிஆர் ரசிகர்கள்... ஈகோ உச்சிக்கு ஏறி வாலி கொடுத்த அடிபொலி ஹிட் சாங்..!
Recommended image2
தாய் பாசத்தில் நயனை அடிச்சுக்க ஆளே இல்ல... ஒரே ஒரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி..!
Recommended image3
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்... பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
Related Stories
Recommended image1
தாய் பாசத்தில் நயனை அடிச்சுக்க ஆளே இல்ல... ஒரே ஒரு போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி..!
Recommended image2
எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்... பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved