- Home
- Cinema
- மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?
மதுரையில் இருந்து சிம்புவின் அரசன் மாநாட்டை தொடங்கும் வெற்றிமாறன்: எப்போது ஸ்டார்ட் தெரியுமா?
Simbu talk about Arasan Movie Shooting : சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் அரசன் படத்தின் படப்பிடிப்பு நாளை மதுரையில் தொடங்குகிறது. தற்போது மலேசியாவில் இருக்கும் சிம்பு நேரடியாக மதுரைக்கு சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்

சிம்பு அப்டேட்:
கலைப்புலி தானு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மலேசியாவில் ஒரு கடை திறப்பிற்கு சென்றுள்ள நடிகர் சிம்பு அரசன் படம் சூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதில் நான் இங்கிருந்து நேராக அரசன் பட சூட்டிங்க்கு செல்வதாகவும், அரசன் படத்தின் சூட்டிங் டிசம்பர் 9ஆம் தேதி ஆரம்பிப்பதாகவும் அப்டேட் கொடுத்துள்ளார். இது சிம்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மத்திய சென்னை ரவுடியா சிம்பு;
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் தன்னுடைய நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக செந்தில், குணா, வேலு, ஜாவா பழனி, சந்திரா ராஜன், அன்பு, இந்த கதாபாத்திரங்களை செதுக்கியிருப்பார். எத்தனை வருடங்கள் கழித்தாலும் வடசென்னையில் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.
Arasan Movie Shooting
வடசென்னை படத்தையும் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தான் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். நடிகர் தனுஷ் நடித்த வடசென்னை திரைப்படத்தை போல் நடிகர் சிம்பு மத்திய சென்னை பிரபலமான ரவுடி மயிலை சிவக்குமார் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இணையத்தில் பரவி வந்தது. இயக்குனர் வெற்றிமாறனும் மயிலை சிவக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக கூறப்படுகிறது.
இயக்குனர் வெற்றிமாறன் மயிலை சிவக்குமார் ஒன்றாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் கூறுகையில் மயிலை சிவக்குமார் எனக்கு அவருடைய வாழ்க்கை வரலாற்றை கூறியதாகவும் அவர் தான் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை ஒரு நோட்டில் எழுதி வைத்திருப்பாளராகவும் அதை வெற்றிமாறனிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாநாட்டின் நாயகன் சிம்பு
கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் அரசன் திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி மதுரையில் இருந்து ஆரம்பிப்பதாக நடிகர் சிம்பு மலேசியாவில் தெரிவித்தார். இந்த நிலையில் மதுரையில் சூட்டிங் ஆரம்பிப்பது மூலம் மத்திய சென்னை மயிலை சிவக்குமார் அவர்களின் கதைக்களத்தை அங்கு எடுத்துச் செல்வதாக தெரியவில்லை.
மதுரையில் சூட்டிங்
மதுரையில் வெற்றிமாறன் சூட்டிங் ஆரம்பிப்பதை பார்க்கையில் நடிகர் தனுஷ் நடித்த ஆடுகளம் கதையைப் போல வேறு ஏதும் கதையை வைத்துள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மதுரை மண்ணில் தமிழ் சினிமாவின் பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் அனைத்து படங்களும் வெற்றியை தான் பெற்றுள்ளது. இது மதுரை மண்ணுக்கே உள்ள சிறப்பாகும். பாசத்துக்கும் வீரத்துக்கும் பேர் போன மதுரை மண்ணிலிருந்து அரசன் படம் சூட்டிங் நடைபெறுவதை பார்க்கும் பொழுது இந்த படம் கண்டிப்பாக நடைபெறும் சிலம்பரசனுக்கு வெற்றியை பெற்று தரும் என்று அவர் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்
விஜய் சேதுபதி வில்லனா?
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் அரசன் திரைப்படம் மதுரையில் சூட்டிங் ஆரம்பிப்பதாக சிம்பு தெரிவித்தார். இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சிலம்பரசன் ரசிகர்கள் படம் எப்போது ஆரம்பிப்பீர்கள் என்று இணையத்தை கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில் நடிகர் சிலம்பரசன் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டிசம்பர் 9ஆம் தேதி கண்டிப்பாக அரசன் படம் சூட்டிங் நடைபெறுவதாக தெரிவித்தார். மக்கள் செல்வர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைவதாக அரசன் பட குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. விஜய் சேதுபதி வில்லனாக வருவாரா இல்லை வேறு ஏதேனும் கதை பாத்திரத்தில் வருவாரா அரசன் படம் வெளியானது பிறகு தெரியவரும்.
நடிகர் சிம்புவை அரசன் ஆக்குவாரா இயக்குனர் வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் எடுத்த படங்கள் அனைத்தும் வெற்றியை பெற்றுள்ளது பொதுவாக நடிகர் தனுஷ் வைத்து எடுத்த திரைப்படம் அனைத்தும் வெற்றி தான். அதேபோல் நடிகர் சிலம்பரசன் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து அரசன் படத்தை தர உள்ளனர் இந்த திரைப்படம் நடிகர் சிம்புவுக்கு ஒரு நல் வாய்ப்பாக கிடைத்துள்ளது இதில் சிம்பு தன் திறமையை நல்ல நிலையில் வெளிப்படுத்தி தன் ரசிகர்களுக்கு தீனி போட்டு மாஸ் என்ட்ரி கொடுத்து அரசன் படத்தை நல்ல படமாக தருவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம். வெற்றிமாறன் நடிகர் சிம்புவை அரசனாக்க முயற்சிப்பார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.