- Home
- Cinema
- கடைசி நேரத்தில் எப்.ஐ.ஆரில் பெயர் சேர்ப்பு... போதை வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாரா ஆர்யன் கான்?
கடைசி நேரத்தில் எப்.ஐ.ஆரில் பெயர் சேர்ப்பு... போதை வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாரா ஆர்யன் கான்?
நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டாரா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது.

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ம் ஆண்டு மும்பையில் உள்ள சொகுசு கப்பன் ஒன்றில் போதை விருந்தில் கலந்துகொண்டதாக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கைதாகி சில வாரம் சிறைவாசம் அனுபவித்த ஆர்யன் கானை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் வெளியே கொண்டுவந்தார் ஷாருக்கான்.
இந்த வழக்கில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தற்போது பகீர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி போதைப்பொருள் வழக்கில் முதலில் தயார் செய்யப்பட்ட எப்.ஐ.ஆரில் ஷாருக்கானின் பெயர் இல்லை என்றும் பின்னர் கடைசி நேரத்தில் மாற்றம் செய்து ஆர்யன் கானின் பெயரையும், அவரது நண்பரான அர்பாஸ் மெர்ச்சண்ட் பெயரையும் சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... குந்தவை - வந்தியத்தேவன் இடையேயான கியூட் ரொமான்ஸ் காட்சிகளுடன் கூடிய ‘அகநக’ பாடலின் முழு வீடியோ இதோ
இந்த போதைப்பொருள் வழக்கில் உரிய ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்ட சவுமியா சிங், சித்தார்த் ஷா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த வழக்கில் தொடர்புடைய கோசாவி என்பவர் ஷாருக்கானிடம் ரூ.25 கோடி கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் சமீர் வான்கடே என்கிற முன்னாள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி உடந்தையாக இருந்ததாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகனை வேண்டுமென்றே சிக்க வைக்க சதி நடந்துள்ளதா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து விசாரிக்க சமீர் வான்கடேவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. சிபிஐ-யிடம் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் உண்மையல்ல என்றும், அவை அனைத்தும் திரித்துக் கூறப்பட்டு இருப்பதாகவும் சமீர் வான்கடே தெரிவித்துள்ளார். இதனால் போதைப்பொருள் வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இதையும் படியுங்கள்... Watch: கிராமத்து நாயகனாக அதகளம் செய்யும் அருள்நிதி.. வைரலாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மாஸ் டிரைலர் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.