- Home
- Cinema
- ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
ஏ.ஆர்.ரகுமான் விலகல் முதல் விஜயால் செய்த மாற்றம் வரை... ஆர்.ஜே.பாலாஜி உடைத்த கருப்பு பட சீக்ரெட்ஸ்
கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, சூர்யாவைப் பற்றியும், அவருடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

RJ Balaji about Karuppu Movie
தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கருப்பு படத்தின் உருவாக்கம் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பகிர்ந்த தகவல்கள் தற்போது கவனம் ஈர்த்துள்ளன. இந்த படத்தின் கதை எப்படி உருவானது என்பது குறித்து அவர் கூறுகையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திலிருந்து முதலில் அழைப்பு வந்தபோது தாம் வேறு ஒரு கதையில் பணியாற்றிக் கொண்டிருந்ததாக தெரிவித்தேன். பின்னர் மீண்டும் வந்த அழைப்பை தான் “இறைவனின் அழைப்பு” போல உணர்ந்ததாகவும் கூறினார். அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே சூர்யாவை சந்தித்து கதையை சொன்னேன். கதையில் இருக்கும் முழுமையான சினிமா அம்சங்கள் அவருக்கு மிகவும் பிடித்ததாகவும், பின்னர் முழு நம்பிக்கையுடன் படத்தை ஒப்படைத்ததாகவும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
விஜய்யிடம் கதை சொன்ன அனுபவம்
முன்னதாக விஜய் சாரிடம் இரு முறை கதைகள் சொல்லிய அனுபவத்தையும் அவர் பகிர்ந்தார். பெரிய நட்சத்திரங்களுக்கான படங்களில் பாடல்கள், நடனக் காட்சிகள் போன்றவை மிக முக்கியம் என்பதை அப்போது புரிந்துகொண்டதாக கூறினார். அதனால் “கருப்பு” படத்திலும் இரண்டு முக்கியமான நடனப்பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்றும், சாய் அபயங்கர் இசையமைத்த பாடல்கள் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
திரிஷா பற்றி சொன்னதென்ன?
பல ஆண்டுகளுக்கு பிறகு திரிஷா மற்றும் சூர்யா இணையும் இந்த படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில், முன்பே திரிஷா உடன் பணியாற்ற வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும், இந்தக் கதையில் அவருக்கான கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்பதால் தயாரிப்பு குழுவிடம் அவரின் பெயரை பரிந்துரைத்ததாகவும் கூறினார். ஆறு படத்திற்கு பிறகு சுமார் 22 ஆண்டுகள் கழித்து இந்த ஜோடி மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் மாற்றம் ஏன்?
இசையமைப்பாளர் மாற்றம் குறித்தும் விளக்கமளித்த அவர், ஏ.ஆர்.ரகுமான் ஆரம்பத்தில் இந்தப் படத்தில் இணைவதில் ஆர்வம் காட்டியதாகவும், கதையையும் விரும்பியதாகவும் கூறினார். ஆனால் சில தனிப்பட்ட காரணங்களால் முழுமையாக ஈடுபட முடியாது என்று தெரிவித்ததால் மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் புதிய தலைமுறை இசையமைப்பாளராக சாய் அபயங்கர்வை தேர்வு செய்ததாகவும், அவரின் ஆற்றல் மற்றும் புதிய சவுண்ட் தான் இந்தப் படத்திற்கு தேவைப்பட்டதாகவும் ஆர்.ஜே.பாலாஜி கூறினார்.
மேலும், இளையராஜா காலத்தில் ஏ.ஆர்.ரகுமான் வந்தது போல, பின்னர் ஹாரிஷ் ஜெயராஜ் மற்றும் அனிருத் போன்றவர்கள் உருவானதுபோல, சாய் அபயங்கர்க்கும் அந்த அளவிற்கு உயர வாய்ப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த படத்தில் நட்டி நட்ராஜ், இந்திரன்ஸ், அனகா, சுவாசிகா, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கருப்பு எப்படிப்பட்ட படம்?
“கருப்பு” ஒரு குடும்பம் முழுவதும் கொண்டாடக்கூடிய விழாக்கால திரைப்படமாக உருவாகி வருவதாகவும், அதில் உணர்ச்சி, ஆக்ஷன், காதல் அனைத்தும் கலந்த ஒரு முழுமையான விருந்தாக இருக்கும் என்றும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார். மேலும், பெண்களை தவறான விதத்தில் காட்டாமல், சமூக பொறுப்புடன் கதை சொல்லுவதே தனது நோக்கம் என்றும் கூறினார்.
சூர்யாவின் பழைய உற்சாகமான, நடனமும் உணர்ச்சியும் கலந்த திரைமுகத்தை மீண்டும் கொண்டு வரவே இந்தக் கதையை உருவாக்கியதாகவும், காக்க காக்க, கஜினி, பிதாமகன் போன்ற படங்களில் அவரை ரசித்த ரசிகர்களுக்கான ஒரு புதிய அனுபவமாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் ஆர்.ஜே.பாலாஜி இந்த தகவல்களை தெரிவித்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
