வரலாறு படைக்கப்பட்டுள்ளது; சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!
Rajinikanth Congratulates Team India: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சிறந்த மனிதர்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய திரைப்பட பணிகளில் தொடர்ந்து பிசியாக இருந்தாலும், சிறந்த படங்கள் மற்றும் நாட்டுக்கு பெருமை தேடி கொடுப்பவர்களை வாழ்த்த தவறுவது இல்லை. அவர் சிறந்த மனிதர் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணமாகவும் பார்க்கப்படுகிறது.
ரஜினியின் அடுத்த திரைப்படம்:
'கூலி' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில், அடுத்ததாக ரஜினிகாந்த் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 'அருணாச்சலம்' படத்தின் வெற்றிக்கு பின்னர்... நீண்ட இடைவெளிக்கு பின் சுந்தர்ச்சி - ரஜினிகாந்த் இணைய உள்ள படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன. அதே போல் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ராகவா லாரென்ஸும் நடிக்க உள்ளகாக கூறப்படுகிறது.
இந்திய அணியின் வெற்றி:
இந்நிலையில் ரஜினிகாந்த், "மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் மகளீர் அணிக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் வாழ்த்து:
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் போட்டுள்ள பதிவில், “இந்தியாவுக்கு என்ன ஒரு அற்புதமான தருணம். நம் மகளிர் அணி வருங்கால தலைமுறைக்கு தங்களது தைரியத்தை காட்டியுள்ளனர். அசைக்க முடியாத சக்தியுடனும், அச்சமற்ற மனப்பான்மையுடனும் இந்தியாவின் மூவர்ணத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளனர். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். தற்போது ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.